27 உறுப்பு கல்லூரிகள் கலைகல்லூரிகளாக மாறின - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, December 13, 2020

Comments:0

27 உறுப்பு கல்லூரிகள் கலைகல்லூரிகளாக மாறின

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பல்வேறு பல்கலைகளின் கீழ் இயங்கி வந்த, 27 பல்கலை உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளை, அரசு கல்லுாரிகளாக மாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
'தமிழகத்தில் உள்ள, 41 பல்கலை உறுப்பு கல்லுாரிகள் அனைத்தும், நடப்பு கல்வியாண்டில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளாக மாற்றப்படும்.'இதற்கென ஆண்டுக்கு, 152.20 கோடி ரூபாய் செலவிடப்படும்' என, சட்டசபையில், 110 விதியின் கீழ், 2018 ஜூன், 1ல் முதல்வர் அறிவித்தார்.அதன்படி, முதல் கட்டமாக, 1995 - 96ம் ஆண்டு முதல், 2010 - 11ம் ஆண்டு வரை துவக்கப்பட்ட, 14 பல்கலை உறுப்பு கல்லுாரிகளை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளாக மாற்றம் செய்ய, அனுமதி அளிக்கப்பட்டது. CLICK HERE TO DOWNLOAD OFFICIAL PDF அந்தக் கல்லுாரிகளுக்கு, 42 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள், 777 ஆசிரியர் பணியிடங்கள், 140 அடிப்படை பணியிடங்கள் போன்றவற்றை தோற்றுவிக்க, அனுமதி அளிக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக, மீதமுள்ள, 27 பல்கலை உறுப்பு கல்லுாரிகளை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளாக மாற்ற, நிர்வாக அனுமதி கோரப்பட்டது.அதற்கு தேவைப்படும், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை தோற்றுவித்து, அதற்கான ஓராண்டு செலவினமாக, 143.74 கோடி ரூபாய் நிதி ஒதுக்கும்படியும், கல்லுாரி கல்வி இயக்குனர், அரசுக்கு கடிதம் அனுப்பினார். அதை ஏற்றுள்ள அரசு, 27 பல்கலை உறுப்பு கல்லுாரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் ஊதியம் வழங்குவதற்கான செலவை, அவை சார்ந்துள்ள பல்கலைகள், இக்கல்வியாண்டு முதல் வழங்க வேண்டும் என, தமிழக அரசு தெரிவித்து உள்ளது.நடப்பு கல்வியாண்டு முதல், 27 பல்கலை உறுப்பு கல்லுாரிகளை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளாக மாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. CLICK HERE TO DOWNLOAD OFFICIAL PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews