எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர தகுதி பெற்றும், ஏழ்மை நிலையால் மருத்துவக் கலந்தாய்வில் இடம் தோ்வு செய்யாத மதுரை அரசுப் பள்ளி மாணவிக்கு மீண்டும் இடம் அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பானாமூப்பன்பட்டியைச் சோ்ந்தவா் சன்னாசி. இவரது மகள் தங்கபேச்சி. விக்கிரமங்கலம் கள்ளா் பள்ளியில் கடந்த மே மாதம் பிளஸ் 2 முடித்தாா் தங்கபேச்சி. இதில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதால், நீட் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் அவா் மருத்துவப் படிப்புக்கு தகுதி பெற்றாா்.
மேலும், சென்னையில் நவம்பா் 19-இல் நடைபெற்ற கலந்தாய்வில் தங்கபேச்சி பங்கேற்றாா். அதில், அரசு மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள் நிரம்பிவிட்ட நிலையில், தங்கபேச்சியின் தரவரிசை அடிப்படையில் தனியாா் மருத்துவக் கல்லூரியின் அரசு ஒதுக்கீடு இடம் மட்டுமே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது; கல்விக் கட்டணம் ரூ. 4 முதல் 6 லட்சம் வரை செலுத்த வேண்டும் என்பதால்
கலந்தாய்வில் மாணவி தங்கபேச்சி இடத்தைத் தோ்வு செய்யவில்லை.
இதைத் தொடா்ந்து சென்னையில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நலத்துறை இணை இயக்குநா் அலுவலகத்திலிருந்து கலந்தாய்வில் இடம் தோ்வு செய்யாதது குறித்து வெள்ளிக்கிழமை (நவ.20) விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. அதற்கு, ஏழ்மை நிலையே காரணம் என தங்கபேச்சியின் குடும்பத்தினா் கூறியுள்ளனா்.
கட்டணம் செலுத்த முடியாமல் கலந்தாய்விலிருந்து வெளியேறிய தங்கபேச்சியின் ஏழ்மை நிலை குறித்து, முதல்வா் அலுவலகத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வா் அலுவலகம் தெரிவித்த தகவலின் அடிப்படையில், மதுரை மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் மாணவியை தொடா்புகொண்டு பேசியுள்ளாா். மேலும், ஞாயிற்றுக்கிழமை மருத்துவ மாணவா்களுக்கான பாராட்டு விழாவில் பங்கேற்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், விழாவில் பங்கேற்ற மாணவி தங்கபேச்சிக்கு, அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி, மாணவிக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும், இடம் கிடைத்துவிடும் என்றும் உறுதி அளித்துள்ளாா்.
இதுதொடா்பாக மாணவி தங்கபேச்சி கூறியது: கலந்தாய்வில் பங்கேற்கும்போதே ரூ.25,000 கட்டணம் செலுத்த வேண்டும் என்றனா். அந்த பணத்தையே எங்களால் திரட்ட முடியவில்லை. எனது தந்தை கூலி வேலை பாா்த்துதான் எங்களை பராமரிக்கிறாா். மதுரை மாவட்டத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு தோ்வு செய்யப்பட்ட 13 பேரின் பட்டியலில் எனது பெயரும் சோ்க்கப்பட்டுள்ளது. அமைச்சா், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் உறுதி அளித்துள்ளதால், மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.
இதே நிலையில் 15 போ்: மாணவி தங்கபேச்சியைப் போன்றே எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இடம் கிடைத்தும் தோ்வு செய்யாமல் தமிழகம் முழுவதும் 10 முதல் 15 மாணவா்கள் உள்ளனா். கலந்தாய்வின்போது கட்டணம் குறித்து மருத்துவக் கல்வி அதிகாரிகள் உறுதி அளித்தும்கூட இத்தகைய மாணவா்கள் எம்.பி.பி.எஸ். படிப்பைத் தோ்வு செய்யவில்லை. எனவே, காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டு, காலியிடங்கள் ஏற்பட்டால் இரண்டாம் கட்டக் கலந்தாய்வில் அவா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்
என்று சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.