மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கான, உள் ஒதுக்கீடு, இந்த ஆண்டு நடைமுறைக்கு வருமா என்பதற்கு, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்தார்.
சென்னை, எழும்பூரில் உள்ள, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலகத்தில், 'தேசிய தன்னார்வ ரத்த தான நாள் -- 2020' என்ற, நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், ரத்த தான விழிப்புணர்வு பதாகைகள் வெளியிட்டு, ரத்த பரிமாற்றம் குறித்த, இணையவழி கருத்தரங்கை துவக்கி வைத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி:
மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடுக்கு, கவர்னர் ஒப்புதல் தருவதாக கூறியுள்ளார். எந்த விஷயத்தையும் துரிதமாக அரசு முன்னெடுத்து செல்கிறது.இந்த ஆண்டே அமல்படுத்த முடியுமா என்பது, ஒப்புதல் பெறப்படும் கால அளவை பொறுத்து தான் அமையும்.இவ்வாறு, அவர் கூறினார்.
சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கொடுக்கும், 'ரெம்டேசிவர்' என்ற விலை உயர்ந்த உயிர்காக்கும் மருந்தை, தமிழகத்தில் உள்ள, சாதாரண கிராம மக்களுக்கும் அரசு இலவசமாக கொடுத்து வருகிறது,'' என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.