அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரத்தில் அரசு முதலில் கல்வியாளர்களை கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். எந்த ஆலோசனையும் இன்றி அரசு திடீரென அறிவித்திருப்பது செல்லாது. தற்போது தேர்ச்சி பெற்றுள்ளவர்களில் 10 வருடமாக அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அவர்களை எப்படி உடனே தேர்ச்சி அடைய வைக்க முடியும். அரியர் வைத்துள்ள மாணவர்களை ஒட்டுமொத்தமாக தேர்ச்சி அடைய வைக்க முடியாது. எந்த அடிப்படையில் தமிழக அரசு இப்படி அறிவித்துள்ளது என்று தெரியவில்லை. ஒருவருடம் இல்லை என்றால் அடுத்த வருடம் அரியர் எழுதலாம். அப்படி இருக்கும் போது அவர்களை எப்படி தேர்ச்சியடைய வைக்க முடியும்.
தமிழக அரசின் இதுபோன்ற தன்னிச்சையான முடிவு மாணவர்களையே அதிகம் பாதிக்கும். அரியர் விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த முடிவை ஏற்றுகொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்ககம் என்ன சொல்கிறதோ அதையே மத்திய அரசு கேட்கும். இதேபோல், மத்திய கல்வி அமைச்சரை கேட்டு அதன் பிறகே ஏஐடிசிஇ கடிதம் அனுப்பும். ஏஐடிசிஇ மத்திய கல்வி அமைச்சரை கேட்காமல் எந்த ஒரு கடிதத்தையும் மாநில அரசுக்கு அனுப்ப முடியாது.
அதனால், தமிழக அரசும் மத்திய அரசை எதிர்த்து முடிவை எடுக்க போவது இல்லை. எனவே, இறுதியில் மாணவர்களுக்கே இது பாதிப்பை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு மட்டுமே இது ஏமாற்றம் அளிக்கும். ஒட்டுமொத்தமாக அரியர் மாணவர்களை தேர்ச்சி அடைய வைப்பது என்பது முன்பு எப்போதும் நடந்தது இல்லை. 1965ல் இந்தி எதிர்ப்பு போராட்டம் 50 நாட்கள் நாங்கள் நடத்தினோம். ஆனால், அப்போது அரியர் உள்ளிட்ட தேர்வை ரத்து செய்யவில்லை. தள்ளி மட்டுமே வைத்தார்கள். கொரோனா பிரச்னை முடிந்த பிறகு அரியர் தேர்வை நடத்த தமிழக அரசு அனுமதி கேட்டிருக்க வேண்டும். குறிப்பாக, இரண்டு அல்லது 3 மாதங்கள் வரையில் யுஜிசியிடம் கால அவகாசம் கேட்கலாம்.
நாம் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் மாணவர்களுக்கு பலன் அளிக்கக்கூடிய முடிவாக இருக்க வேண்டும். தமிழக அரசு இதுபோன்ற முடிவுகளை எடுப்பதில்லை. அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரத்தில் அடிப்படை என்ன என்று தெரியாமலேயே அரசு அறிவித்துள்ளது. அரியர் மாணவர்கள் தேர்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றமும் அரியர் தேர்ச்சி செல்லாது என்று தான் சொல்லப்போகிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்ககம் என்ன சொல்கிறதோ அதையே தமிழக அரசு கேட்க முடியும். அரியர் விவகாரத்தில் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது.
இதேபோல், கட்டணம் கட்டிய மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளதும் குழப்பத்தின் மேல் குழப்பமாகவே உள்ளது. நடைமுறை சிக்கல்களுடன், ஏற்றத்தாழ்வான ஒரு அறிவிப்பையே தமிழக அரசு அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரத்தில் வெளியிட்டுள்ளது. எனவே, மாணவர்கள் விவகாரத்தில் ஒரு அறிவிப்பை வெளியிடும் போது கல்வியாளர்கள் மற்றும் அதுகுறித்த வல்லுநர்களுடன் முறையாக கலந்து ஆலோசித்து பின்னரே அறிவிக்க வேண்டும். 1965ல் இந்தி எதிர்ப்பு போராட்டம் 50 நாட்கள் நாங்கள் நடத்தினோம். ஆனால், அப்போது அரியர் உள்ளிட்ட தேர்வை ரத்து செய்யவில்லை. தள்ளி மட்டுமே வைத்தார்கள். கொரோனா பிரச்னை முடிந்த பிறகு அரியர் தேர்வை நடத்த தமிழக அரசு அனுமதி கேட்டிருக்க வேண்டும்.
* தன்னிச்சையாக அறிவித்தது அரசின் தெளிவற்ற அணுகுமுறை: பேராசிரியர் காந்திராஜ், பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநில தலைவர்
அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்பது யுஜிசி, ஏஐடிசிஇயை தமிழக அரசு கலந்தாலோசிக்காமல் கொடுத்தது போல் தான் தெரிகிறது.ஆனால், இப்போது அமைச்சர்கள் யுஜிசி என்ன சொல்கிறதோ அதை கேட்டுக்கொள்கிறோம் என்று கூறுகிறார்கள். இதேபோல், யுஜிசியும் இதுவரையில் அரியர் மாணவர்கள் விவகாரத்தில் எந்த முடிவையும் சொல்லவில்லை. இந்தநிலையில், நீதிமன்றத்திலும் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் அரியர் மாணவர்கள் குழப்பத்தின் உச்சகட்டத்தில் உள்ளனர். அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதில் அவர்களுக்கு குறிப்பிட்ட மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றாவது அரசு அறிவித்திருக்க வேண்டும். குறைந்தபட்ச மதிப்பெண்கள் கொடுத்து அவர்கள் தேர்ச்சி அடைவார்கள் என்றாவது தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், இதற்கும் ஒரு தெளிவான விளக்கம் அரசிடம் இல்லை.
கொரோனா ஊரடங்கு காலம் முடிந்த பிறகு அரியர் தேர்வை நடத்த தமிழக அரசு இரண்டு அல்லது 3 மாதங்கள் வரையில் யுஜிசியிடம் கால அவகாசம் கேட்டிருக்கலாம். இப்படி கேட்டு கொடுக்காத பட்சத்தில் மாணவர்களை தேர்ச்சியடைய செய்திருந்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், எதுவுமே கேட்காமல் தன்னிச்சையாக அறிவித்தது அரசின் தெளிவற்ற அணுகுமுறையாகும். இதனால், அரியர் மாணவர்கள் என்னசெய்வதென்று தெரியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
எந்த ஒரு முடிவை எடுக்கும் போதும் அரசு கல்வியாளர்களை அழைத்து பேசுவதில்லை. நிர்வாக ரீதியான ஆட்களை வைத்தே அரசு முடிவெடுக்கிறது. கல்வியாளர்கள், பேராசிரியர்களை அழைத்துப்பேசி கருத்தை கேட்டு அதற்கேற்ப முடிவை எடுத்திருக்கலாம். யு.கே.ஜி, எல்.கே.ஜி குழந்தைகளுக்கு தேர்வுகளை ரத்து செய்தது போல் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி அறிவித்ததை ஏற்றுகொள்ளமுடியாது.
யுஜிசியுடன் கலந்தாலோசித்து முடிவு எடுத்து இருந்தால் இதுபோன்ற சிக்கல்கள் எழ வாய்ப்பு இல்லை. அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவிக்கும் போது உண்மையிலேயே படித்து அரியர் இல்லாமல் வேலைக்கு செல்லும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது. குறிப்பிட்ட தொழில்நுட்ப பிரிவுகளை யார் அரியர் இல்லாமல் படித்தார்கள். யார் அரியர் வைத்திருக்கிறார்கள் என்பது தெரியாமல் வேலை கொடுக்கும் நிலைக்கு தொழில்நிறுவனங்களும் தள்ளப்படுகிறது.
4.5 லட்சம் பேரை ஒரே நேரத்தில் தேர்ச்சி என்று அறிவிக்கும் போது ஒரு வேலைக்கு போட்டி என்பது அதிகமாக இருக்கும். அரியர் இல்லாமல் படிக்கும் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்பது கேள்விக்குறியாகிறது. 27 அரியர் வைத்துள்ள மாணவர் ஒரே அறிவிப்பில் தேர்ச்சி என்று அறிவிக்கும் போது அதை எப்படி ஏற்றுகொள்ள முடியும். இதை அரசு முறையாக யோசித்திருக்க வேண்டும்.
இதேபோல், கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவித்துள்ளார்கள். சிலர் பணம் இல்லாமல் அடுத்த முறை பணம் செலுத்தி தேர்வு எழுதிகொள்ளலாம் என்று இருந்திருப்பார்கள். இதனால், பணம் செலுத்தாமல் ஏழ்மை நிலையில் உள்ள அரியர் மாணவர்கள் தேர்ச்சி அடைய மாட்டார்கள். இது ஏற்றத்தாழ்வான நடைமுறையாகவே உள்ளது. அரியர் தேர்ச்சி என்பது கூட பணத்தின் அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பணம் கட்டிய ஒரே காரணத்திற்காக தேர்ச்சி என்பதை எப்படி ஏற்றுகொள்ள முடியும். இது தவறான அணுகுமுறை ஆகும். கல்வியாளர்கள், பேராசிரியர்களிடம் கருத்தை கேட்டு அதற்கேற்ப முடிவை எடுத்திருக்கலாம். யு.கே.ஜி, எல்.கே.ஜி குழந்தைகளுக்கு தேர்வுகளை ரத்து செய்தது போல் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி அறிவித்ததை ஏற்றுகொள்ளமுடியாது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups