மாற்று மருத்துவத்துக்கு மவுசு அதிகரித்துள்ளதால், ஆயுர்வேத மருத்துவ படிப்பான பி.ஏ.எம்.எஸ்., முக்கியத்துவம் பெறுகிறது.இந்தியாவின் பாரம்பரிய மருத்துவம் ஆயுர்வேதம். சமஸ்கிருதத்தில், 'ஆயுர்' என்றால் வாழ்க்கை. வேதம் என்றால் அறிவு. வாழ்க்கையின் அறிவே ஆயுர்வேதம் என்று அழைக்கப்பட்டது. உணவு, நச்சு நீக்கம், துாய்மைப்படுத்தல், மூலிகை மற்றும் சத்துப் பொருட்களுடன் உடல் நலத்தை மேம்படுத்துகிறது.
யோகா, மூச்சுப் பயிற்சி, தியானம் மற்றும் மசாஜ் தெரபி ஆகியன இப்பிரிவின் சிறப்பான மருத்துவப்பிரிவில் அடங்குகின்றன.இந்தியாவில் இத்துறைக்கு இன்றும் சிறப்பான வரவேற்பு உண்டு. தற்போது, மேற்கத்திய நாடுகளிலும் பரவலான ஆதரவை இம்மருத்துவம் பெற்று வருகிறது. பழங்கால ஆயுர்வேத மருத்துவத்திலேயே அறுவை சிகிச்சைகள் உண்டு. ஆனால், அவற்றை தற்போதைய நவீன அறுவை சிகிச்சையோடு ஒப்பிட முடியாது.என்றாலும் இன்றைய நவீன தொழில்நுட்பங்களின் வருகைக்கு ஏற்பவும் வாழ்க்கைத் தரத்துக்கு ஏற்பவும் ஆயுர்வேதம் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பின், எளிதில் மீளவும் இத்துறை உதவுகிறது. படிப்பு காலம் நான்கரை ஆண்டுகளாகும். இதே பிரிவில் முதுகலை படிப்பும் உள்ளது. அத்துடன் ஒரு ஆண்டு பயிற்சி காலமும் உண்டு.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups