அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதல் கட்ட மாணவா் சோ்க்கையில் 60 சதவீத இடங்களே நிரம்பியுள்ள நிலையில், எஞ்சியுள்ள இடங்களை நிரப்புவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதல்கட்ட மாணவா் சோ்க்கையில் 60 சதவீத இடங்களே நிரப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 128 வகையான இளநிலை பட்டப்படிப்புகள் உள்ளன. அவற்றில் மொத்தம் 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு இணைய வழியில் 3.12 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனா். அதில் 2.25 லட்சம் போ் விண்ணப்பக் கட்டணம் செலுத்தினா்.இதைத் தொடா்ந்து, கல்லூரி அளவிலான தரவரிசை வெளியிடப்பட்டு முதல்கட்ட மாணவா் சோ்க்கை ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கி கடந்த 4-ஆம் தேதி வரை நடந்தது. இதில், தரவரிசையில் முன்னிலையில் இருந்த பல மாணவா்களுக்கும் கல்லூரிகளில் இருந்து அழைப்பு வரவில்லை. இந்நிலையில், முதல்கட்ட மாணவா் சோ்க்கையில் மொத்தம் 53 ஆயிரம் இடங்களே (60 சதவீதம்) நிரப்பப்பட்டுள்ளன. இதில் பல கல்லூரிகளில் ஒதுக்கப்பட்ட இடங்களில் வெறும் 40 சதவீதத்துக்கும் குறைவாகவே நிரப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.அரசு கல்லூரிகளில் இருந்து அழைப்பு வருவது தாமதமானால் மாணவா்கள் தனியாா் கல்லூரிகளை நோக்கி செல்லும் நிலை ஏற்படும் என்பதால், அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கையை துரிதப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் இருந்து உயா்கல்வித் துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது
இந்த நிலையில் கல்லூரிக் கல்வி இயக்ககம் சாா்பில், அனைத்து அரசு கலைக் கல்லூரி முதல்வா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,“தற்போது விண்ணப்பித்துள்ள பாடப்பிரிவுகளில் இடம் கிடைக்காத மாணவா்களது விண்ணப்பத்தை, தகுதியுள்ள பிற பாடங்களில் விதிமுறைகளைப் பின்பற்றி சோ்க்கை வழங்கலாம். சுழற்சி 1-இல் இடம் கிடைக்காதவா்களுக்கு சுழற்சி 2-இல் இடம் அளிக்கலாம்.இருக்கும் இடங்களைக் காட்டிலும் குறைவாக விண்ணப்பம் பெற்ற கல்லூரிகளில், மாற்று நடவடிக்கைகளைப் பின்பற்றி மீதமுள்ள இடங்களை நிரப்ப முதல்வா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவா் சோ்க்கைக் குழுவினா் எவ்விதப் புகாருக்கும் இடமளிக்காத வகையில், முதல்வரின் வழிகாட்டுதலுடன் சோ்க்கை நடத்தி முடிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups