ரத்து செய்யப்பட்ட முதுகலை மருத்துவ தேர்வுகள் திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 24ம் தேதி முதல் முதுகலை மருத்துவ தேர்வுகள் நடைபெறுவதாக மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ள நிலையில், அது குறித்த அட்டவணை வெளியீடப்பட்டது.
ரத்து செய்யப்பட்ட முதுகலை மருத்துவ தேர்வுகள் வரும் 24ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பல்வேறு தேர்வுகளை மத்திய மாநில அரசுகள் ஒத்திவைத்தும் ரத்து செய்தும் வருகிறது. இறுதியாண்டு தேர்வு மட்டும் நடத்த பல்கலைக் கழகங்கள் திட்டமிட்டு வருகின்றன. ஆனாலும் கொரோனா பாதிப்பு காரணமாக எப்போது நடத்த முடியும் என்பது தெரியவில்லை.
இந்த நிலையில், ஆகஸ்ட் 17ம் தேதி நடைபெறுவதாக இருந்த முதுகலை மருத்துவத் தேர்வுகள், மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாதாக தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு அறிவித்திருந்தார். ஆனால், முதுநிலை மருத்துவ மாணவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே, ஓய்வின்றி உழைக்கும் அவர்களால் தேர்வுகளை எழுத முடியாத நிலையில், தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனால், தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட முதுகலை மருத்துவ தேர்வுகள் வரும் 24ம் தேதி முதல் நடைபெறும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வு அட்டவணையையும் மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.