கல்வித்துறையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது. அதற்காக அமைக்கப்பட்ட குழுவில் தனியார் பள்ளிகளின் சார்பிலும் சிலர் இடம்பெற்றனர். அப்போது எங்கள் தரப்பில் 67 பக்கம் கொண்ட பரிந்துரையை அப்போதைய முதல்வர் கலைஞரிடம் கொடுத்தோம். அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை முதல்வர் பரிசீலித்தார். அதற்கு பின்புவந்த ஆட்சியில் சமச்சீர் புத்தகங்களை மாற்றியது, வரிசையாக அமைச்சர்களை மாற்றியது, முதன்மைச் செயலாளர்களை மாற்றியது, இயக்குநர்களை மாற்றியது, பாடத்திட்டத்தை மாற்றியது என்று பல மாற்றங்கள் நடந்தாலும் மாணவர்கள் கல்வியில் மாற்றம் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. இதுதான் தமிழகத்தில் இன்று உள்ள கல்வியின் நிலை.
இப்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பள்ளிக்கல்வித்துறையில் முடிவு எடுப்பதில் பல குழப்பங்களை நாம் பார்க்க முடிகிறது. இந்த குழப்பத்துக்கு இடையே புதிய பாடத்திட்டம் ஒன்றும் கொண்டு வரப்பட்டது. இது சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு இணையானது என்று கல்வித்துறை கூறி வருகிறது. அப்படி இருக்கும் போது, கடந்த 3 ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை ஏன் குறைந்தது. இந்நிலையில்தான், சிபிஎஸ்இ பள்ளிகளை நோக்கி மாணவர்கள் படையெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எம்பிபிஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர வேண்டும் என்றால் சிபிஎஸ்இ தான் படிக்க வேண்டும் என்பதும், நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் சிபிஎஸ்இ பாடங்களில் இருந்துதான் கேட்கப்படுகின்றன என்ற வதந்தியும் தான் சிபிஎஸ்இ மோகம் வளர காரணம். ஆகவே நமது கல்வித்திட்டம் குறித்தும் நாம் ஆய்வு செய்ய வேண்டும்.
சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்தால்தான் மருத்துவராக முடியும் என்ற சித்தாந்தத்தை மாற்ற வேண்டும். புதிய பாடத்திட்டங்களை கொண்டு வந்தாலும், மேனிலைக் கல்வி படிக்கும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு, மருத்துவத்துறை மற்றும் நீட், ஜெஇஇ போன்ற தேர்வுகளை எழுதும் மாணவர்களை கணக்கெடுத்து அதை அடிப்படையாக கொண்டு பிளஸ் 1, பிளஸ்2 பாடத்திட்டங்களை ஏ, பி என்று பிரிக்க வேண்டும். அதில் ஏ பிரிவு என்பது பாடத் திட்டத்தில் எம்பிபிஎஸ், ஜெஇஇ, ஐஐடி, நீட் போன்ற போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் என்று அறிவிக்க வேண்டும்.
கோவா, மகாராஷ்டிராவில் உள்ள பாடத்திட்டங்கள் போல கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் உள்ளதை அப்படியே கடைபிடிக்கின்றனர். அதேபோல, தமிழகத்திலும் கடைபிடிக்க வேண்டும். இதனால் மாணவர்கள் போட்டித் தேர்வில் வெல்ல முடியும். அதேபோல, 3, 5, 8ம் வகுப்புகளுக்கு தேர்வு என்று முதலில் அறிவித்தனர். பின்னர் இல்லை என்று அறிவித்தனர். இதுபோன்ற குழப்பத்துடன் கூடிய அறிவிப்புகள் மாணவர்களை அச்சுறுத்துகின்றன. இதுபோன்ற கல்விமுறைகள் யாரையோ திருப்திப்படுத்த கொண்டு வரப்படுகின்றதோ என்ற சந்தேகம் மக்களுக்கு எழுகிறது.
இதுமட்டுமல்லாமல், பள்ளிக் கல்வித்துறைக்கு தற்போது தேவையாக இருப்பது ஓராண்டுத் திட்டம். இதற்காக ஒரு வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும். அதில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மெட்ரிக் பள்ளிகள், நர்சரி, பிரைமரி பள்ளிகள், பிளே ஸ்கூல்ஸ் ஆகியவற்றுடன் அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேனிலைப் பள்ளி, நிதியுதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களை கொண்டு குழுவை அமைத்து அந்த குழுவின் ஆலோசனைகள், ஏற்று ஆண்டுத் திட்டம் உருவாக்க வேண்டும்.
அந்த திட்டத்தை ஒட்டியே அறிவிப்புகள் ஒவ்வொரு மாதமும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆணையிட வேண்டும். இப்படி செய்தால் குழப்பங்கள் தீரும். தமிழக கல்வித்துறையும் மறுமலர்ச்சி பெறும். இன்றைய தேவை தரமான கல்வி, வளமான தமிழகம்தான். 3, 5, 8ம் வகுப்புகளுக்கு தேர்வு என்று முதலில் அறிவித்தனர். பின்னர் அது இல்லை என்று அறிவித்தனர். இதுபோன்ற குழப்பத்துடன் கூடிய அறிவிப்புகள் மாணவர்களை அச்சுறுத்து கின்றன. இதுபோன்ற கல்வி முறைகள் யாரையோ திருப்திப்படுத்த கொண்டு வரப்படுகின்றதோ என்ற சந்தேகம் மக்களுக்கு எழுகிறது.
* அதிகாரிகளின் ஆலோசனையால் அலைக்கழிக்கப்படும் மாணவர்கள்: ஆர்.எத்திராஜுலு, முன்னாள் மாநிலத் தலைவர், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம்
அண்மையில் பாடத்திட்டத்தை குறைப்பதற்காக அரசு 16 பேர் கொண்ட ஒரு குழு அமைத்தது. அதில் 12 பேர் அதிகாரிகள். மீதி 4 பேர் சிபிஎஸ்இ பள்ளிகளை சேர்ந்தவர்கள். அதில் ஒருவர்கூட அரசு பள்ளியை சேர்ந்த ஆசிரியர்களோ, தலைமை ஆசிரியர்களோ, பெற்றோர்களோ கிடையாது. சிபிஎஸ்இ பள்ளியை நிர்வகிக்க கூடியவர்கள்தான் உள்ளனர். குழுவில் உள்ள ஒருவருக்கும் அரசு பள்ளிகள் குறித்து ஏதும் தெரியாது. இது மாதிரியான ஒரு குழு அளிக்கும் அறிக்கைகள் எப்படி அரசு பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கல்வியை நம்பியுள்ள மாணவர்களுக்கு நியாயத்தை வழங்க முடியும். இதுபோன்று அரசின் பல்வேறு செயல்கள் உள்ளன. இந்தியாவிலேயே எங்கும் 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது. தமிழகத்தில்தான் முதலில் அறிவிக்கப்பட்டது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெற்றோர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து அரசு அந்த முடிவை கைவிட்டது.
இதேபோல், கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், பரவல் உச்சத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டிற்கான 10ம் பொதுத்தேர்வை பெரும்பாலான ஆசிரியர் இயக்கங்கள் தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் ரத்து கூட செய்ய சொல்லவில்லை. இவை எதையும் அரசு ஏற்காமல் நாங்கள் நடத்தியே தீருவோம் என்று அதற்கான பணிகளை அரசு செய்து வந்தது. பணிகள் பெருமளவு மேற்கொள்ளப்பட்ட பின்னர், தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பிலும் இதுவரை தனி தேர்வர்களின் நிலை என்னவென்று அரசு தெளிவாக அறிவிக்கவில்லை. மற்ற மாணவர்கள் வெற்றி பெற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டதால், தனித்தேர்வர்களையும் அறிவிக்க வேண்டும். சரி தேர்வுதான் இப்படியென்றால், வெற்றி அறிவிப்பிலும் சிக்கல் உள்ளது. காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களை வைத்து முழு ஆண்டு மதிப்பெண்கள் வழங்குவது பெரும் பாதிப்பு ஏற்படுத்தும்.
இதேபோல், 12ம் வகுப்பு தேர்வு முதன்முறையாக புதிய பாடத் திட்டத்தின் கீழ் நடந்தது. நாம் பாடத்திட்டத்தில் அதிகம் வேண்டும் என்று அதிக பாடங்களை கொண்டு வந்து விட்டோம். இது மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 95 சதவீத மதிப்பெண் சி.பி.எஸ்.இ மாணவர்கள் 1000 பேரும், அரசு பள்ளி மாணவர்கள் 100 பேரும் எடுத்துள்ளனர். இதனால் கால்நடை கல்லூரி, அரசு இன்ஜினியரிங் உட்பட அனைத்து இடங்களும் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கே செல்லும். ஏற்கனவே இதுபோன்று பிரச்னை வரும்போது சி.பி.எஸ்.இ மற்றும் அரசு பள்ளி மாணவர்களின் சதவீதத்தை வைத்து 98 சதவீத இடம் அரசு பள்ளி மாணவர்களுக்கும், 2 சதவிகித இடம் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கும் கலைஞர் கொண்டு வந்தார். அதன்படி அண்ணா பல்கலைகழகம் வழங்கியது.
எனவே இந்த வருடம் இது மாதிரி ஏதேனும் செய்தால் மட்டுமே நமது அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்கும். இதனால் 95 சதவீதம் இடம் அரசு பள்ளி மாணவர்களுக்கும், 5 சதவீத இடம் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கும் வழங்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்தாண்டு பல்வேறு பிரச்னைகள் இருந்தது. கேள்வித்தாள்களும் கடினமாக இருந்தது. புதிய பாடத்திட்டம் பளு, கொரோனா பீதி இதுபோன்ற காரணங்களால் அரசு பள்ளி மாணவர்களின் மதிப்பெண்கள் குறைந்தது. எனவே இந்த வருடம் சதவிகிதப்படி இடம் இல்லையென்றால் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலை அறிவியல் கல்லூரியில் கூட இடம் கிடைக்காது.
தற்போது மாணவர்களின் கல்வியை பொறுத்தவரை அரசிடம் சரியான திட்டமிடல் இல்லை, கல்வியாளர்கள் யாரையும் கலந்து யோசிப்பதில்லை. அனுபவம் பெற்ற யாருமே இல்லாமல் வெறும் அதிகாரிகளை வைத்து முடிவெடுத்தால் அரசு மட்டுமில்லாமல், மாணவர்களுக்கும் பல்வேறு சிக்கல்கள் உண்டாகும். இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நிலை கேள்விக்குறியாகும். அனுபவம் பெற்ற யாருமே இல்லாமல் வெறும் அதிகாரிகளை வைத்து முடிவெடுத்தால் அரசுக்கும் மட்டுமில்லாமல், மாணவர்களுக்கும் பல்வேறு சிக்கல்கள் உண்டாகும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.