எந்த மொபைலாக இருந்தாலும்.. 3 நிமிடத்தில் முழு சார்ஜ்.. அட்டகாச படைப்பு..!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 12, 2020

Comments:0

எந்த மொபைலாக இருந்தாலும்.. 3 நிமிடத்தில் முழு சார்ஜ்.. அட்டகாச படைப்பு..!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கேட்பதற்கு சற்று ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஆனால் இந்த நிகழ்வு உண்மைதானா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. அனைத்து மொபைல்களும் இனி மூன்றே நிமிடத்தில் சார்ஜ் ஏறும் விதமாக புதிய சார்ஜர் ஒன்றை ரியல்மீ நிறுவனம் வெளியிட உள்ளது. தற்போது மொபைல் உலகில் போட்டிகள் ஏராளம். ஒவ்வொரு நிறுவனமும் தங்களது மொபைலில் சிறு சிறு மாற்றங்களை கொண்டு வந்து அதை புதிய மொபைலாக வெளியிட்டு மக்களிடம் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அடிக்கடி அப்டேட் செய்வதன் மூலம் மட்டுமே நாம் நிலைத்து நிற்க முடியும் என்பதை உணர்ந்த நிறுவனங்கள் இவ்வாறு செய்கின்றனர். சரி மொபைலோடு நிறுத்தி விட்டார்களா என்று கேட்டால் கட்டாயம் இல்லை. ரியல் மீ நிறுவனம் இதற்கு ஒருபடி மேலாகச் சென்று வயர்லெஸ் புளூடூத், போன் சார்ஜர், மொபைல் உதிரி பாகங்கள் உள்ளிட்ட மற்ற மொபைலுக்கும் தேவையான சாதனங்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
அந்த வகையில் தற்போது ரியல் மீ நிறுவனம் 100w பிளஸ் சார்ஜர் ஒன்றை தயாரித்து உள்ளதாக தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 120w வரை வேகம் கொண்ட இந்த சார்ஜர் மூலம் 4000+ Mah கொண்ட பேட்டரிகளை வெறும் மூன்றே நிமிடத்தில் சார்ஜ் செய்துவிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சார்ஜருக்கான சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வரும் சூழ்நிலையில், இம்மாத இறுதியில் வெளியாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், இந்தியாவில் விற்பனையாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4,000 ஆம்ப் பேட்டரி திறன் கொண்ட மொபைல் 3 நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் அடைகிறது என்பதை நம்ப முடிகிறதா? ஆனால் இத்தகைய மொபைலை ரியல்மி நிறுவனம் உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாறி வரும் சூழலுக்கு ஏற்ப மொபைல் போனில் அதிக சார்ஜ் இருப்பதைத்தான் மக்கள் தற்போது அதிகம் விரும்புகின்றனர். இதனால் குறைந்தது 4,000 முதல் 6,000 ஆம்ப் பேட்டரி திறன் கொண்ட மொபைல்கள சந்தையில் அதிகம் விற்பனையாகின்றன. அதே நேரத்தில் வேகமாக சார்ஜ் ஏறும் மொபைல்கள் மக்களின் விருப்பமாக இருக்கிறது. கூடவே, கேமராவும் 48 மெகா பிக்சல் ரேஞ்சுக்கு இருந்தால் அந்த மொபைல் போன் நிச்சயமாக நல்ல விற்பனையை சந்திக்கும். இந்த சூழலில்தான் 120 வாட்ஸ் வேகத்தில் சார்ஜ் ஏறும் போனை ரியல்மி வடிவமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை கணக்கிடும்போது 4,000 ஆம்ப் பேட்டரி திறன் கொண்ட மொபைல் 3 நிமிடத்தி சார்ஜ் ஏறி விடும். இந்த சார்ஜர் அல்லது மொபைல் செட் இம்மாத இறுதியில் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிக பேட்டரி திறன் மற்றும் அதிவேக சார்ஜிங் இந்த இரண்டும் இருக்கும் மொபைல்கள்தான் இப்போது நல்ல விற்பனையை எதிர்கொள்கின்றன. இந்த ஃபார்முலாவை அறிந்திருக்கும் ஓப்போ, ரியல்மி போன்ற மொபைல் நிறுவனங்கள் அதிகவேக சார்ஜர்களையும், நீண்ட திறன் கொண்ட பேட்டரிகளையும் வடிவமைத்து வருகின்றன. எதிலும் நடு நிலைமையை கையாள்வததான் அதிக பலன் கொடுக்கும் என்பதை வாடிக்கையாளர்கள் மறந்துவிடக் கூடாது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews