Breaking

Thursday, June 11, 2020

'டிக்டாக்'க்கு பதிலாக களம் இறங்கியுள்ள புது ஆப்...! பெரும் வரவேற்பு!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சீனாவின் டிக்டாக் செயலிக்கு மாற்றாகச் சிங்காரி என்ற புதிய செயலியைப் பெங்களூர் புரோகிராமர்ஸ் உருவாக்கியுள்ளனர். சீன செயலியான டிக்டாக்கை இந்தியாவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் டிக்டாக் செயலிக்குப் போட்டியாகச் சிங்காரி என்ற செயலியைப் பெங்களூரைச் சேர்ந்த புரோகிராமர்ஸான பிஸ்வத்மா நாயக் மற்றும் சித்தார்த் கவுதமன் ஆகியோர் உருவாக்கியுள்ளனர். இந்தச்செயலியின் மூலம் வீடியோவை பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் செய்வது மட்டுமின்றி, நண்பர்களுடன் மெசெஜ் அனுப்பி சாட் செய்யவும் முடியும். அத்துடன் புதிய நண்பர்களுக்கு மெசெஜ் அனுப்பவும், இண்டர்நெட்டில் மற்றவற்றைத் தேடிப்பார்க்கவும் முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் ஸ்டெட்டஸ், வீடியோ கிளிப்ஸ், ஆடியோ கிளிப்ஸ், ஜிஐஎஃப் ஸ்டிக்கர்ஸ் மற்றும் புகைப்படங்களையும் உருவாக்கலாம். அத்துடன் செய்திகள், நகைச்சுவை வீடியோக்கள், பாடல்கள், ஸ்டேட்டஸ் வீடியோக்கள், தத்துவ வாக்கியங்கள், மீம்ஸ் ஆகியவற்றையும் எடுக்கலாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, கன்னடம், வங்க மொழி, பஞ்சாபி, குஜராத்தி, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இதைப் பயன்படுத்தலாம். இந்தச் செயலிக்கு இந்தியர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது வரை ஒரு லட்சம் பேர் இதைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog