சி.ஏ., ஆவது எப்படி? வழிகாட்டி நேரலையில் இன்று விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 16, 2020

Comments:0

சி.ஏ., ஆவது எப்படி? வழிகாட்டி நேரலையில் இன்று விளக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'தினமலர்' நாளிதழ் மற்றும் 'அம்ரிதா விஸ்வ வித்யாபீடம்' வழங்கும், 'ஆன்லைன் வழிகாட்டி' நிகழ்ச்சியில், சி.ஏ., - சி.எம்.ஏ., - ஏ.சி.எஸ்., மற்றும் இன்ஜினியரிங் படிப்புகள் குறித்து, இன்றைய நேரலையில் விளக்கம் அளிக்கப்படுகிறது.நேற்றைய நிகழ்ச்சியில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுகள் குறித்து, சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்., பேசினார்.
'ஹெல்த் சயின்சஸ்' வாய்ப்புகள் குறித்து, 'வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், டெக்னாலஜி அண்ட் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ்' பேராசிரியர் சதீஷ்குமார் பேசினார். கல்விக் கடன் வாய்ப்புகள் குறித்து வங்கி அதிகாரி, விருத்தாசலம் ஆகியோர் ஆலோசனை வழங்கினர். நேரலையில் இன்று...நாளையுடன் நிறைவடைய உள்ள, ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் இன்று, சி.ஏ., - சி.எம்.ஏ., - ஏ.சி.எஸ்., படிப்புகள் குறித்து, ஆடிட்டர் சேகர் விளக்கம் அளிக்கிறார். இன்ஜினியரிங் துறை படிப்புகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து, அம்ரிதா விஸ்வ வித்யாபீடம் பேராசிரியர், ஜெயகுமார், தொழில்முனைவோர் அல்லது சி.இ.ஓ., ஆக தேவையான திறன்கள் குறித்து சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர், தில்லைராஜன் ஆகியோர் பதில் அளிக்கின்றனர்.
காலை, 10:௦௦ முதல் 12:௦௦ மணி வரை நடைபெறும் நேரலை நிகழ்ச்சியில், பங்கு பெற மற்றும் கல்வியாளர்களிடம் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற, www.kalvimalar.com என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.அதில், பெயர், மொபைல் எண், இ- - மெயில் முகவரிபோன்ற தகவல்களை அளித்து, உடனே பதிவு செய்யலாம். கல்விமலர் இணையதளத்தில் இருந்து மாணவர்களுக்கான இலவச வழிகாட்டி, இ-- கையேட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்நிகழ்ச்சியில், எச்.சி.எல். டெக்னாலஜிஸ் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், 'பவர்டு பை ஸ்பான்சர்'களாக பங்கேற்கின்றன. வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், டெக்னாலஜி அண்டு அட்வான்ஸ்டு ஸ்டடீஸ், ஸ்ரீ சாய்ராம் கல்வி நிறுவனங்கள், இ-பாக்ஸ் காலேஜ்ஸ் மற்றும் ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் ஆகிய நிறுவனங்கள் உடன் வழங்குகின்றன.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews