Breaking

Wednesday, May 06, 2020

இன்ஜி., கல்லுாரி, 'அட்மிஷன்' எப்போது?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இன்ஜினியரிங் கல்லுாரிகள் அங்கீகாரம் பெறுவது, மாணவர் சேர்க்கை நடத்துவது தொடர்பாக, புதிய தேதி, அட்டவணையை, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக, ஏ.ஐ.சி.டி.இ., வெளியிட்ட அறிவிப்பு:கொரோனா பிரச்னை காரணமாக, 2020 - 21ம் கல்வி ஆண்டிற்கான தேதி மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து இன்ஜினி யரிங் மற்றும் ஏ.ஐ.சி.டி.இ., இணைப்பு பெற்ற கல்லுாரிகள் அங்கீகாரம் பெறுவதற்கும், மாணவர் சேர்க்கையை முடிப்பதற்கும், புதிய கால அட்டவணை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, ஏ.ஐ.சி.டி.இ.,யின் செயற்குழு, ஏப்ரல், 27ல் அவசர கூட்டம் நடத்தி, சில முடிவுகளை எடுத்தது. அதன்படி, அனைத்து தொழில்நுட்ப கல்லுாரிகளுக்கும், ஜூன், 15க்குள் அங்கீகாரம் வழங்கும் பணிகளை முடிக்க வேண்டும்.ஜூன், 30க்குள் அந்தந்த மாநில பல்கலைகள் சார்பில், இணைப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.
மாணவர் சேர்க்கையை, ஆகஸ்ட், 1ல் துவங்கி, ஆக., 15க்குள், முதல் சுற்று மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்க வேண்டும். ஆக., 25க்குள் இரண்டாம் சுற்று மாணவர்களுக்கும், ஆக., 31க்குள் காலி இடங்களுக்கும், மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும்.தற்போது, கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, ஆக., 1ல் வகுப்புகளை துவங்க வேண்டும். முதலாம் ஆண்டு புதிய மாணவர்களுக்கு, செப்., 1ல் வகுப்புகள் துவங்கப்பட வேண்டும். இந்த கால அட்டவணையை, கல்லுாரிகள் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.திறந்தநிலை படிப்பு முதுநிலை டிப்ளமோ படிப்பை நடத்தும், தொழில்நுட்ப கல்லுாரிகள், வரும் ஜூலை, ௩௧க்குள் மாணவர்கள் சேர்க்கையை முடிக்க வேண்டும். ஆக.,1ல் வகுப்புகளை துவக்கி, ௨௦௨௧ ஜூலையில், பாடங்களை முடிக்க வேண்டும்.  திறந்த நிலை படிப்பில் மாணவர்களை சேர்க்க விரும்பும் தொழில்நுட்ப கல்லுாரிகள், ஆக., 15 முதல், பிப்., 15 வரை மாணவர்களை சேர்க்கலாம் என, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog