👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அகவிலைப்படி நிறுத்திவைத்ததற்கு தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) தலைவர் கிருஷ்ணமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அகவிலைப்படி உயர்வு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அதனை ஈடுகட்டுவதற்காக வழங்கப்படக் கூடிய ஒரு தொகை தான். ஆனால் கொரோனா நிவாரண நிதி தேவையை மத்திய அரசிடம் போராடி பெறுவதற்கு மாறாக அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை நிறுத்தி வைப்பதும் ,ஆண்டுதோறும் பெறக்கூடிய ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியத்தை நிறுத்தி வைப்பது ஏற்புடையதல்ல.
தமிழக அரசு உடனே மறுபரிசீலனை செய்ய வேண்டும், ஏற்கனவே ஜனவரி மாதம் முதல் அறிவிக்கவேண்டிய அகவிலைப்படியை உடனடியாக அறிவித்து விடுவிப்பது, தொடர்ந்து விலைவாசி உயர்வுக்கு ஏற்ற அகவிலைப்படியை அறிவித்து வழங்கிட வேண்டும். அதேபோன்று ஊழியர்களின் செலவினங்களை ஈடு கட்டும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியத்தினை விடுவிக்க வேண்டும். இவ்வாறு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.