Search This Blog
Saturday, March 14, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''வரும் கல்வியாண்டில், 5.72 கோடி ரூபாய் செலவில், 25 புதிய அரசு தொடக்கப் பள்ளிகள் துவக்கப்படும்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்தார்.
சட்டசபையில், 110 விதியின் கீழ், பள்ளிக் கல்வித்துறையில், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: வரும் கல்வியாண்டில், 5.72 கோடி ரூபாய் செலவில், 25 புதிய அரசு தொடக்கப் பள்ளிகள் துவக்கப்படும். ௧௦ அரசு தொடக்கப் பள்ளிகள், 3.90 கோடி ரூபாய் செலவில், நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்கு தேவைப்படும், மூன்று கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும். தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்கள், பணி நிரவல் வாயிலாக நிரப்பப்படும்
15 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக, தரம் உயர்த்தப்படும். இவற்றுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள், 26.25 கோடி ரூபாய் செலவில் செய்து தரப்படும். தேவையான கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள், 9.87 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும் 30 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்கு தேவையான, உள்கட்டமைப்பு வசதிகள், 55.50 கோடி ரூபாய் செலவிலும், தேவையான கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள், 21.36 கோடி ரூபாய் செலவிலும் ஏற்படுத்தப்படும் தமிழகத்தில் முதல் கட்டமாக, 1,890 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
வரும் கல்வியாண்டில், மீதமுள்ள, 4,282 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், 48.73 கோடி ரூபாய் செலவில், கண்காணிப்பு கேமரா வசதி ஏற்படுத்தப்படும் பள்ளி கட்டடங்கள் மற்றும் அலுவலகங்களை பராமரிக்க, ஆண்டுதோறும் வழங்கப்படும், பராமரிப்பு மற்றும் செப்பனிடுதல் பணிகளுக்கான மானிய தொகை, 38.50 கோடியில் இருந்து, 100 கோடி ரூபாயாக, 2020 - 21ம் ஆண்டில் உயர்த்தி வழங்கப்படும்.இவ்வாறு, முதல்வர் அறிவித்தார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
'புதிதாக 25 அரசு தொடக்க பள்ளிகள்': முதல்வர் இ.பி.எஸ்., அறிவிப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.