வழங்கப்படும் படிப்புகள்:
எட்டு வார கால அளவுடைய குறுகிய காலச் சான்றிதழ் படிப்பான Orientation Course on Accelerators, Lasers and related Science and Technologies (OCAL), ஒவ்வொரு ஆண்டும் மே முதல் ஜூலை மாதம் வரை நடத்தப்படும். அதன்படி 2020ம் ஆண்டுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதில் சேர விருப்பம் உள்ளவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்விநிறுவனங்களில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, நானோ டெக்னாலஜி ஆகிய துறைகளில் M.E / M.Tech படித்திருக்க வேண்டும். அல்லது M.Sc Physics அல்லது Integrated M.Sc (Physics) / M.S (Physics) அல்லது மேற்கூறிய துறைகளில் Integrated M.E / M.Tech படித்திருத்தல் அவசியம்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
+2, இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளில் எடுத்த மதிப்பெண்கள் மற்றும் ‘Particle Accelerators and Lasers in Healthcare and Medicine’ என்ற தலைப்பில் எழுதவேண்டிய கட்டுரையின் அடிப்படையிலும் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு வாரம் ரூ.375 என்ற வீதத்தில் எட்டு வாரமும் மொத்தம் 3 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கல்லூரித் துறைத்தலைவரின் (HOD) அனுமதிக் கடித்தத்துடன் http://www.rrcat.gov.in என்ற இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 30.3.2020.
மேலதிக தகவல்களுக்கு http://www.rrcat.gov.in என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்கவும்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.