Flash News: TANCET தேர்வு முடிவுகள் வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 12, 2020

Comments:0

Flash News: TANCET தேர்வு முடிவுகள் வெளியீடு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
TANCET Result 2020: டான்செட் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுடைய முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய TANCET நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வை எழுதிய மாணவர்கள், தங்களுடைய தேர்வு முடிவினை www.tancet.annauniv.edu/cet20 என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் MBA, MCA, மற்றும் M.E. / M.Tech / M.Arch / M.Plan உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கான TANCET நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. 2020-21 கல்வியாண்டிற்கான TANCET தேர்வு கடந்த பிப்ரவரி 29, மார்ச் 1 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது TANCET 2020 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் www.tancet.annauniv.edu/cet20 என்ற இணையதளத்தில் TANCET முடிவினை தெரிந்து கொள்ளலாம். இதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மேற்கண்ட முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
முதுநிலைப் படிப்புக்கான டான்செட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான், எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்) தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த நிலையில், 2020-ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. அதன்படி எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கு பிப்ரவரி 29-ம் தேதியும் எம்.இ., எம்.ஆர்க்., எம்.பிளான் படிப்புகளுக்கு மார்ச் 1-ம் தேதியும் தேர்வு நடத்தப்பட்டது. இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அட்டவணைப் பட்டியலின்படி, டான்செட் நுழைவுத் தேர்வு முடிவுகள் மார்ச் 20-ம் தேதிக்குள் வெளியாக வேண்டும். அவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் மார்ச் 23-ம் தேதியில் இருந்து வெளியிடப்படும். இந்த மதிப்பெண் சான்றிதழ்கள் ஏப்ரல் 10-ம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் இருக்கும். டான்செட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள், அண்ணா பல்கலை. நடத்தும் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள வேண்டும். அதில் அவர்களின் மதிப்பெண்ணுக்கு ஏற்ற இடங்கள் ஒதுக்கப்படும்.
மதிப்பெண் சான்றிதழை மாணவர் சேர்க்கையின்போது, விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும். கூடுதல் தகவல்களுக்கு https://www.annauniv.edu என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews