குரூப் 4 தேர்வு - TNPSC விளக்கம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 17, 2020

Comments:0

குரூப் 4 தேர்வு - TNPSC விளக்கம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
குரூப் -- 4' தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு குறித்து, டி.என்.பி.எஸ்.சி., விளக்கம் அளித்து உள்ளது. இது குறித்து, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:'குரூப் - 4' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ள, ஆன்லைனில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய, டிச., 5 முதல், 18 வரை அவகாசம் வழங்கப்பட்டது. பதிவேற்றம் செய்தவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, கவுன்சிலிங் தேதி, டி.என்.பி.எஸ்.சி.,இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த பட்டியலில் உள்ளவர்கள், மீண்டும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டாம். அதே நேரம், கூடுதலாக, 27 பேர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். அவர்கள் மட்டும், தங்கள் சான்றிதழ்களை, பிப்., 18க்குள், 'இ - சேவை' வழியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு: எண்: 14/2020 நாள்: 16.02.2020 தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தனது 12.02.2020 நாளிட்ட செய்தி வெளியீட்டு எண் 12/2020 ல், தொகுதி 4 தேர்வுக்கு தற்காலிகமாக சான்றிதழ் சரிபார்ப்புக்காக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் ஸ்கேன் செய்யப்பட்ட தங்களது சான்றிதழ் நகல்களை 13.02.2020 முதல் 18.02.2020 க்குள் தேர்வாணைய இணைய தளத்தில், அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது.
இந்த செய்தி வெளியீடானது சில தேர்வர்களால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு, ஏற்கனவே இத்தேர்வுக்கென தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தவர்களும் மீண்டும் தங்களது சான்றிதழ்களை இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து கீழ்கண்ட விளக்கம் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே 05.12.2019 முதல் 18.12.2019 வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்த தேர்வர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு கலந்தாய்வுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் தகுதியான தேர்வர்கள் பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் 12.02.2020 அன்று வெளியிடப்பட்டுள்ளது, கலந்தாய்வுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் யாரும் தங்களது சான்றிதழை மீண்டும் இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யத் தேவையில்லை.
அவர்கள் கலந்தாய்வுக்கு வரும்போது தங்களது மூலச் சான்றிதழ்களை கொண்டுவந்தால் போதுமானதாகும். தற்போது கூடுதலாக சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட 27 தேர்வர்கள் மட்டும் தங்களது சான்றிதழ்களின் நகல்களை இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்தால் போதுமானது. தற்போது சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டிய 27 தேர்வர்களின் பதிவெண்கள் 12.02.2020 அன்று வெளியிடப்பட்ட கலந்தாய்வுக்காக தெரிவு செய்யப்பட்டவர்களின் பட்டியலின் கீழே 47 வது பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews