Breaking

Wednesday, February 19, 2020

மாற்று திறனாளிகளுக்கு கல்லுாரிகளில் சிறப்பு வசதி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'மாற்று திறனாளி மாணவர்களுக்கு உரிய வசதிகளை, கல்லுாரிகளில் ஏற்படுத்த வேண்டும்' என, பல்கலை மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,யில் இருந்து, அனைத்து கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள் போன்ற அனைத்து உயர் கல்வி நிறுவனங்களில், மாற்று திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு வசதிகளை, கட்டாயம் ஏற்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மாற்று திறனாளிகளுக்கு என, பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
மாற்று திறனாளிகள் நடப்பதற்கு, சாய்வு பாதைகள் அமைக்க வேண்டும். கழிப்பறைகளில் தனி வசதி செய்யப்பட வேண்டும். மாற்று திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி செல்வதற்கு ஏற்ற, வளாக கட்டமைப்புகளையும், வகுப்பறைகளையும் அமைக்க வேண்டும். அவர்களின் குறைகளை கேட்டறிந்து செயல்படுத்தும் வகையில், பேராசிரியர்கள், கல்லுாரி அலுவலர்கள் மற்றும் மாணவர் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog