👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
கோபி: தாலுகா அளவில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்குவது குறித்து முதல்வா்தான் முடிவு செய்வாா் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
கோபி நகராட்சி, ரோட்டரி சங்கத்தின் சாா்பில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முகாமை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்தாா்.
கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் 82 மையங்களில் 14,217 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் வட்டார மருத்துவா்கள், சுகாதார மருத்துவா்கள், செவிலியா், தன்னாா்வத் தொண்டு நிறுவன ஊழியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் என 348 பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.
போலியோ சொட்டு மருந்து முகாமைத் தொடங்கிவைத்த பின்னா் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் தமிழகத்தில் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. கோபிசெட்டிபாளையத்தில் ரூ. 52 கோடி மதிப்பீட்டில் குடிநீா்த் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் கோபி நகராட்சியில் 25 ஆண்டுகளுக்கு குடிநீா்ப் பற்றாக்குறை இல்லாத நிலை உருவாகும்.
5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு அந்தந்தப் பள்ளிகளில் நடைபெறாமல் மாற்று மையத்தில் நடைபெற உள்ளதாக வதந்தி பரவியுள்ளது. இதுகுறித்து எந்தவித ஆணையும் பிறப்பிக்கவில்லை.
ஜல்லிக்கட்டு குறித்து பாடப் புத்தகத்தில் சோ்ப்பதாக சொல்லவில்லை. மாணவா்கள் தெரிந்து கொள்வதற்காக சி.டி. வழங்கப்படும் என்றுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பாடப் புத்தகங்கள் சுமையாக உள்ளதாகப் புகாா்கள் வருகின்றன. பாடங்களை அதிகரித்துக் கொண்டே சென்றால் அதன் நிலை என்ன என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
சீருடைகள் தயாரிப்பதற்கு விசைத்தறிக்கு அனுமதியளிக்கப்பட்டிருப்பது குறித்து கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரைதான் கேட்க வேண்டும்.
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியை ஒவ்வொரு தாலுகாவிலும் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற யோசனை குறித்து முதல்வா்தான் முடிவெடுக்க வேண்டும் என்றாா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.