சாதிய அடையாளங்களோடு பள்ளிக்கு வரக்கூடாது - அமைச்சர் ராஜ் மோகன் அதிரடி உத்தரவு Students must not come to school displaying caste markers – Minister Raj Mohan issues a stern order.
சாதி, மதம் சம்பந்தப்பட்ட அடையாளங்களோடு கல்வி வளாகத்திற்குள் யாரும் வரக்கூடாது என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
சின்ன கயிறாக இருந்தாலும் நான் வரும்போது கழட்டிப் போட்டுவிட்டுத்தான் வருகிறேன்; இங்கு எதற்கும் இடம் கிடையாது. சமூக நீதி ஒன்றிக்குத் தான் இடம் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். சாதி, மதம் சம்பந்தப்பட்ட அடையாளங்களோடு கல்வி வளாகத்திற்குள் யாரும் வரக்கூடாது என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம் என்றும், சின்ன கயிறாக இருந்தாலும் நான் வரும்போது கழட்டிப் போட்டுவிட்டுத்தான் வருகிறேன்; இங்கு எதற்கும் இடம் கிடையாது. சமூக நீதி ஒன்றிக்குத் தான் இடம் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்த்தித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "தமிழகத்தில் முதற்கட்டமாக ஐந்தாயிரம் பள்ளிகளில் ஏ.ஐ, பைத்தான் உள்ளிட்ட கோடிங் கற்றுக்கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க ஏற்பாடு செய்யப்படும். இந்தாண்டு தேர்ச்சி நல்ல நிலையில் இருந்தாலும் போதாது; தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆலோசித்தோம்.
மதம், ஜாதி அடையாளங்களோடு கல்வி வளாகங்களுக்கு யாரும் வரக்கூடாது என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். சின்ன கயிறாக இருந்தாலும் நான் வரும்போது கழட்டிப் போட்டுவிட்டுத்தான் வருகிறேன். இங்கு எதற்கும் இடம் கிடையாது. சமூக நீதி ஒன்றிக்குத்தான் இடம். இங்கு ஒரே ஒரு விஷயத்திற்கு தான் வாய்ப்பு, அறிவியல். அடுத்த தலைமுறை போன தலைமுறையை விட கல்வியில் இன்னும் சிறப்பாக வர வேண்டும். மற்ற மாநிலங்களை விட தமிழகம் நன்றாக இருக்கிறது, சந்தோஷம். மற்ற நாடுகளை விட சிறப்பாக வர வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.