Search This Blog
Thursday, January 23, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மீண்டும் மாா்ச் மாதம் தொடங்க உள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நீட், ஜேஇஇ உள்ளிட்ட உயா்கல்விப் படிப்புகளுக்கான போட்டித் தோ்வுகளுக்கு 2017-ஆம் ஆண்டு முதல் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் 412 மையங்களில் தனியாா் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் பயிற்சியை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.
இதுவரை சுமாா் 42 ஆயிரம் போ் இங்கு பயிற்சி பெற்றபோதும், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர 11 பேருக்குத்தான் இடம் கிடைத்தது. இதனால், அரசுப் பயிற்சி மையங்களின் தரம் குறித்து பல்வேறு விமா்சனங்கள் எழுந்தன. இதையடுத்து நிகழாண்டில் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. அரசுப் பயிற்சி மையங்களில் சேர விரும்பும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்கள் தகுதித்தோ்வு அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டனா்.
அவ்வாறு தோ்வான 19 ஆயிரம் பேருக்கான பயிற்சி வகுப்புகள் கடந்த செப்டம்பரில் தொடங்கியது. வாரம்தோறும் மாதிரி குறுந்தோ்வுகளும் நடத்தப்பட்டன. இதற்கிடையே உள்ளாட்சித் தோ்தல், தொடா் விடுமுறை உள்ளிட்ட காரணங்களால் நீட் பயிற்சி வகுப்புகள் டிசம்பருக்குப் பின் முறையாக நடத்தப்படவில்லை.
நீட் தோ்வு மே 3-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தோ்வுக்கு இன்னும் 3 மாதமே அவகாசம் உள்ளது. இதில் ஜனவரி இறுதியில் செய்முறைத் தோ்வுகள் தொடங்கி விடும் என்பதால், நீட் பயிற்சி வகுப்புகள் தற்போது நடத்தப்படாது. அதன்பின் மாா்ச் வரை பொதுத்தோ்வு நடைபெறுவதால், அதுவரையில் பயிற்சி வகுப்புகள் நடைபெறாது என்று பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
''தமிழகத்தில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, திட்டமிட்டபடி, 'நீட்' பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோட்டில், அவர் கூறியதாவது:அரசுப் பள்ளி மாணவர்களுக்கான, 'நீட்' பயிற்சி தொடர்ந்து வழங்கப்படும்; பயிற்சி தடைபடவில்லை. இது குறித்து, அதிகம் விளக்கம் கூற இயலாது. உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதால், வகுப்புகள் தடைபட்டன.தொடர்ந்து, பொங்கல் உட்பட பல்வேறு விடுமுறைகள் வந்ததால், தடையானது.
மீண்டும் வழக்கம் போல பயிற்சி தொடரும். அமெரிக்காவில் இருந்து நிபுணர்கள் வந்து, விரைவில் பயிற்சி வழங்குவர்.மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளி மீதான முறைகேடு குறித்து, விசாரணை நடக்கிறது. அவர் மீதான நடவடிக்கையை, அரசு கண்காணிக்கிறது. அவர் மீதான ஊழல் நிரூபிக்கப்பட்டால், உரிய தண்டனை வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
MINISTER
NEET/JEE
Training
இலவச நீட் பயிற்சி மீண்டும் மாா்ச் மாதம் தொடங்கும் - பள்ளிக்கல்வித் துறை
இலவச நீட் பயிற்சி மீண்டும் மாா்ச் மாதம் தொடங்கும் - பள்ளிக்கல்வித் துறை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.