உயிரி தொழில்நுட்பத்தில் ஆய்வு மேற்கொள்ள மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 10, 2020

Comments:0

உயிரி தொழில்நுட்பத்தில் ஆய்வு மேற்கொள்ள மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
இந்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறையால் ஆரம்பிக்கப்பட்டதுதான் Biotechnology Industry Research Assistance Council-BIRAC என்று சொல்லப்படும் ஆராய்ச்சி அமைப்பு. வளர்ந்துவரும் உயிரி தொழில்நுட்பவியல் (Bio-technology) துறை சார்ந்த ஆராய்ச்சிகள் மேற்கொண்டு கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதற்கும் அத்துறை சார்ந்த தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்துவதற்கும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இப்பொதுத்துறை நிறுவனம் இயங்கி வருகிறது. இவ்வமைப்பு சமூகப் பிரச்னைகளுக்கு உயிரி தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளின் மூலம் தீர்வு காணும் ஆராய்ச்சியாளர்களுக்கு SPARSH (Social Innovation Immersion Program) எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்திவருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆய்வாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி SPARSH உதவித்தொகைக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
ஃபெல்லோஷிப் Maternal and Child Health, Ageing and Health, Food and Nutrition, Waste to Value, Combating Environmental Pollution, Agri-Tech போன்ற துறைகளில் சமூகப் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளையோ அல்லது வழிமுறையையோ உருவாக்கியிருப்பவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படவிருக்கிறது. இத்திட்டத்தின்படி ஆய்வாளர்களுக்கு உடனடி நிதியாக ரூ.5 லட்சமும், மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் வீதம் 18 மாதங்களும் உதவித்தொகை வழங்கப்படும். கல்வித் தகுதி அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் B.Tech, B.E, MBBS, MSc, MS, M.Tech, MPhil, Ph.d படித்திருப்பவர்கள் இவ்வுதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் Life Science, Agriculture, Engineering, Medicine and Human Biology ஆகிய துறைகளில் ஆய்வு மேற்கொள்பவர்களாக இருத்தல் வேண்டும். மேலும் 35 வயதுக்கும் குறைவாக விண்ணப்பதாரர்கள் இருத்தல் அவசியம்.
தேர்வு செய்யப்படும் முறை விண்ணப்பதாரர்களின் கண்டுபிடிப்புகளின் திட்டவரையறை, ஆய்வுத்திட்டம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வல்லுநர்குழுவால் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://www.birac.nic.in/index.php என்ற இணையதளம் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 15.1.2020.மேலும் விவரங்களை https://www.birac.nic.in/index.php என்ற இணையதளப் பக்கத்தில் பார்க்கலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews