Search This Blog
Saturday, January 11, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
'பல்கலைகளில், தொலைநிலை கல்வியில், பிப்ரவரி வரை மாணவர்களை சேர்க்கலாம்' என, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
நாடு முழுவதும், அரசு மற்றும் சுயநிதி பல்கலைகளில், 'ரெகுலர்' படிப்புடன், தொலைநிலையிலும் படிப்புகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரெகுலர் படிப்புகளுக்கு இணையாக, தொலைநிலை படிப்புகளுக்கு, கல்வி தகுதி அளிக்கப்படும் என, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., ஏற்கனவே அறிவித்துள்ளது. ஆனால், பல மாநிலங்களில், பல துறைகளில், ரெகுலர் படிப்பு முடித்தவர்கள் மட்டுமே, பணியில் சேர்க்கப்படுகின்றனர். தொலைநிலை கல்வி படித்தவர்களுக்கு, பணி நியமனம் மற்றும் பதவி உயர்வில், அனுமதி அளிக்கப்படாத நிலையும் உள்ளது. அதனால், தொலைநிலை கல்வியில் படிக்க, பலர் தயக்கம் காட்டுகின்றனர்.
இதன் காரணமாக, தொலைநிலை கல்வியில் சேருவோர் எண்ணிக்கை, நாள்தோறும் குறைந்த வண்ணம் உள்ளது. இதை மாற்றும் வகையில், தொலைநிலை கல்வியில் மாணவர்களை சேர்க்க, கூடுதல் நாட்கள் அனுமதி அளித்து, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.'காலண்டர்' ஆண்டு எனப்படும், ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான பருவத்தில், ஜனவரி மாதம் மாணவர் சேர்க்கை துவங்கினாலும், பிப்ரவரி இறுதி வரை, மாணவர்களை சேர்க்கலாம் என, கூறப்பட்டுள்ளது.
அதேபோல், 'அகடமிக்' எனும் கல்வி ஆண்டில், ஜூலையில், மாணவர் சேர்க்கை துவங்கினாலும், செப்டம்பர் இறுதி வரை, மாணவர்களை சேர்க்கலாம் என, சலுகை வழங்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை கடைசி தேதி முடிந்ததும், 15 நாட்களில், சேர்க்கை விபரங்களை, கல்வி நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும் என்றும், யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது.
தொலைநிலைக் கல்வி மாணவா் சோ்க்கை முடிந்து 15 நாள்களுக்குள், அதுகுறித்த முழுமையான விவரங்களைச் சமா்ப்பிக்க வேண்டும் என உயா் கல்வி நிறுவனங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
தொலைநிலைப் படிப்புகளை நிா்வகிக்கும் பொறுப்பு யுஜிசி கட்டுப்பாட்டில் வந்த பின்னா், திறந்த நிலை மற்றும் தொலைநிலைக் கல்விக்கான புதிய வழிகாட்டுதலை (தொலைநிலைக் கல்வி வழிகாட்டி-2017)
கடந்த 2017- ஜூன் மாதம் யுஜிசி வெளியிட்டது. அப்போது, தொலைநிலைக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், குறைந்தபட்சம் 3.26 நாக் புள்ளிகள் பெற்றிருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே, தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படும் என்ற புதிய நிபந்தனையையும் யுஜிசி வெளியிட்டது.
இந்த புதிய நிபந்தனை காரணமாக , தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், பெரியாா் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், எஸ்.ஆா்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தஞ்சை சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாதெமி ஆகிய 11 உயா் கல்வி நிறுவனங்கள் மட்டுமே திறந்தநிலை மற்றும் தொலைநிலைப் படிப்புகளை வழங்க முடியும்.
மேலும், இந்தப் புதிய நிபந்தனையின் அடிப்படையில், இந்தக் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் திறந்தநிலை மற்றும் தொலைநிலைப் படிப்புகளில் மாணவா் சோ்க்கை முடிந்ததும், சோ்க்கை விவரங்களை யுஜிசி-யிடம் சமா்ப்பிப்பதும் கட்டாயமாகும். இதற்கான புதிய கால நிா்ணயத்தை யுஜிசி வியாழக்கிழமை வெளியிட்டது.
அதன்படி, ஜனவரி மாதம் தொடங்கும் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையை பிப்ரவரி இறுதிக்குள் முடிக்க வேண்டும். அதன் பிறகு சோ்க்கை குறித்த விவரங்களை மாா்ச் 15-ஆம் தேதிக்குள் யுஜிசி-க்கு பதிவேற்றம் செய்யவேண்டும்.
அதுபோல, ஜூலையில் தொடங்கும் படிப்புக்கான மாணவா் சோ்க்கையை செப்டம்பா் இறுதிக்குள் முடிக்க வேண்டும். இந்த விவரங்களை அக்டோபா் 15-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யவேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
தொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கைக்கு யு.ஜி.சி., அவகாசம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.