ஜியோ நிறுவனம்
அதாவது ஜியோ நிறுவனம் இப்போது அறிவித்துள்ள ரூ.149-கேஷ்பேக் திட்டம் கூகுள் பே வழியே கிடைக்கும் ஒரு குறிப்பிட்ட கால சலுகையாகும். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் எந்த நேரத்திலும் ஜியோ மற்றும் கூகுள் பே மூலம் திரும்பப் பெறப்பட கூடிய ஒரு சலுகை ஆகும். எனவே இது கூகுள் பே பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும் என ஜியோ.காம் வலைதளம் குறிப்பிடப்பட்டுள்ளது.மை ஜியோ அல்லது ஜியோ.காம்
கூகுள் பே செயலியை பதிவிறக்க செய்து, உங்களது செல்போன் எண்ணை கூகுள் பே செயலியில் பதிவு செய்து, மை ஜியோ அல்லது ஜியோ.காம் வழியாக குறைந்தது ரூ.149 அல்லது அதற்கு மேலான ரீசார்ஜை செய்ய வேண்டும். ஆனால் குறிப்பிட்ட திட்டத்தின் பண பரிவர்த்தனையை கூகுள் பே மூலம் நிகழ்த்த வேண்டும்.
ரூ.149 என்கிற வெகுமதியை பெறமுடியும்
இப்படி ரீசார்ஜ் செய்தால் ரூ.149-கேஷ்பேக் சலுகையை பயனர்கள் பெற முடியும். மேலும் இந்த சலுகை காலத்தின் கீழ் பயனர்களுக்கு அதிகபட்சம் ஒரு ரீவார்ட் கிடைக்கும். அந்த ரீவார்டில் நீங்கள் ரூ.149 என்கிற வெகுமதியை பெறமுடியும்.
ரூ.149 கேஷ்பேக் சலுகையை பெற கூகுள் பே செயலி உடன் உங்களின் பதிவு செய்யப்பட்ட வங்கி கணக்கை இணைக்க வேண்டும் இந்த சலுகையை பெறுவதற்கு நீங்கள் உங்களின் கூகுள் பே செயலியை அன்இன்ஸ்டால் செய்து இருக்க கூடாது
இந்த சலுகை
பின்பு இந்த சலுகை காலத்தின் கீழ் கூகுள் பே -ஐ பயன்படுத்தி மை ஜியோ மற்றும் ஜியோ.காம் வழியாக செய்யப்பட்ட முதல் பரிவரத்தனை இதுவாக இருக்க வேண்டும். மேலும்நிகழ்த்தப்படும் இந்த பரிவர்த்தனை ஆனது குறைந்தது ரூ.149-ஆக இருக்க வேண்டும், ரூ.149-க்கு கீழான ரீசார்ஜ்கள் கணக்கில் எற்றுக்கொள்ளப்பட மாட்டாது
குறிப்பாக இந்த சலுகையை பெற பயனர்கள் கூகுள் பே செயலியில் UPI ID உள்ளிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.