Breaking

Thursday, December 12, 2019

அரையாண்டு தேர்வு துவக்கம்: மாநிலம் முழுவதும், ஒரே வினாத்தாள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பள்ளி அரையாண்டு தேர்வுகள், நேற்று துவங்கின. மாநிலம் முழுவதும், ஒரே வினாத்தாளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பள்ளிக்கல்வி துறையின், அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில், சமச்சீர் கல்வி பாட திட்டம் உள்ளது. இதில், முப்பருவ பாடம் மற்றும் தேர்வு முறை பின்பற்றப்படுகிறது. 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வு முறை கடைப்பிடிக்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டு மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வு, நேற்று துவங்கியது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு களுக்கு, தமிழ் மற்றும் பிற மொழி தேர்வுகள், நேற்று நடத்தப்பட்டன. 10ம் வகுப்புக்கு, நாளை அரையாண்டு தேர்வு துவங்க உள்ளது.
அதேபோல், ஒன்று முதல் ஒன்பது வரையிலான வகுப்புகளுக்கு, நாளை முதல் இரண்டாம் பருவ தேர்வு துவங்க உள்ளது. இந்த தேர்வுகளில், மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாளை பின்பற்ற, பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது. 'நடப்பு கல்வி ஆண்டு முதல், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு அறிவிக்கப்பட்டு இருந்தாலும், பொது தேர்வுக்கான மாதிரி வினா வடிவத்தில் தான், இந்த அரையாண்டு வினாத்தாள் வழங்கப்படும்' என, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog