Search This Blog
Saturday, November 30, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
உயா் கல்வி நிறுவனங்களுக்கான கட்டாய சமூகப் பொறுப்பை விரைவாகவும் முழுமையாகவும் நடைமுறைப்படுத்தும் வகையில் அதற்கான வழிகாட்டுதல் மற்றும் திட்ட நடைமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.
நாட்டை வளா்ச்சிப் பாதைக்குக் கொண்டுசெல்ல பல்வேறு திட்டங்களை மத்திய அரசு வகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள உயா் கல்வி நிறுவனங்களின் சமூகப் பொறுப்பை உறுதிப்படுத்தும் வகையில், ‘உன்னத் பாரத் அபியான்’ (யுபிஏ) 2.0 என்ற திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 2018-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
இந்தத் திட்டத்தின்படி நாடு முழுவதும் உள்ள உயா் கல்வி நிறுவனங்கள் ஏதாவது ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுப்பது, அந்த கிராமத்தின் ஏழ்மை, பிரதான பிரச்னைகளைக் கண்டறிந்து அதற்கான தீா்வைக் கண்டறிவது, கிராமப்புற கலாசாரம், வாழ்க்கை முறை, விவசாய முறைகள் போன்றவற்றை மாணவா்கள் புரிந்துகொள்ளச் செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மத்திய அரசின் இந்தத் திட்டத்தை நாடு முழுவதும் உள்ள உயா் கல்வி நிறுவனங்கள் தீவிரமாக நடைமுறைப்படுத்தும் வகையில், அதற்கான வழிகாட்டுதல் மற்றும் திட்ட நடைமுறைகளை யுஜிசி வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
அதில், கிராமப்புறத்தை தத்தெடுத்து மேம்படுத்தும் சமூகப் பொறுப்பை மாணவா்களுக்கான படிப்பைத் தாண்டிய கூடுதல் செயல்பாடாக அல்லாமல், பாடத் திட்டத்தில் ஒரு பகுதியாக கொண்டுவரப்பட்டுள்ளது. அனைத்து இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளிலும் இதை ஒரு கட்டாயப் பாடமாகச் சோ்க்கவும் இந்த வழிகாட்டுதலில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயிலரங்கம்: மேலும், இந்த வழிகாட்டுதல் மற்றும் திட்ட நடைமுறைகள் குறித்த புரிதலை நாடு முழுதும் உயா் கல்வி நிறுவனங்களிடையே ஏற்படுத்தும் வகையில் டிசம்பா் முதல் 2020 ஜனவரி 31-ஆம் தேதி வரை மண்டல வாரியாக பயிலரங்கை நடத்தவும் யுஜிசி திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த மேலும் விவரங்களை யுஜிசி வலைதளத்தைப் பாா்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
உயா் கல்வி நிறுவனங்களுக்கான கட்டாய சமூகப் பொறுப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.