SSC CGL 2019 Exam Notification Exam.. மத்திய அரசுப் பணிக்கான தேர்வு.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 22, 2019

Comments:0

SSC CGL 2019 Exam Notification Exam.. மத்திய அரசுப் பணிக்கான தேர்வு..

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
SSC CGL 2019 Notification: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அளவிலான தேர்வு குறித்த விபரங்கள் இன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது SSC CGL 2019 Notification: எஸ்.எஸ்.சி (SSC) எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் SSC CGL எனப்படும் தேர்வு நடத்தி வருகிறது. CGL என்பது Combined Graduate Level ஆகும். அதாவது, ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு தகுதிக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2019-2020 ஆண்டுக்கான SSC CGL Exam 2019 Notification குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு எஸ்.எஸ்.சி தேர்வாணையம் மார்ச் 2020 வரையில் எப்போது, எந்த தேர்வு நடத்தப்படும் என்பது குறித்த உத்தேச தேர்வு கால அட்டவணையை வெளியிட்டிருந்தது. அதன்படி, ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அளவிலான எஸ்.எஸ்.சி தேர்வு அறிவிக்கை இன்று வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது. விண்ணப்பதாரர்கள் இதனை www.ssc.nic.in என்ற இணையதளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.
வயது வரம்பு: SSC CGL 2019-20 மொத்தம் ஐந்து வகையான பணிகளுக்கு SSC CGL தேர்வு நடத்தப்படுகிறது. இவை ஒவ்வொன்றிருக்கும் தனித்தனித் வயது வரம்புகள் உள்ளது. Statistical Investigator Grade II பணிக்கு 32 வயது, Assistant in CSS பணிக்கு 20-30 வயது,Assistant in IB பணிக்கு 21-30 வயது, Assistant Enforcement Officer/SI In CBI/Si in NIA பணிகளுக்கு 30 வயது, SI in Central Bureau of Narcotics 18-27 வயது என்று வரையறுக்கப்பட்டுள்ளது. SSC CGL Tier 1 தேர்வு கணினி வழித் தேர்வாக நடத்தப்படும். இந்த தேர்வு 2020 மார்ச் 2 முதல் 11 ஆம் தேதி வரையில் நடைபெறும். இதே போல், Tier II தேர்வு ஜூன் 22 முதல் 25 ஆம் தேதி வரையில் நடைபெறும். Tier III மற்றும் Tier IV தேர்வுகள் குறித்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். SSC CGL 2019 Notification தொடர்பான முழுமையான விபரங்களுக்கு www.ssc.nic.in இணையதளத்தை அவ்வபோது பார்த்துக் கொள்ளவும். எஸ்.எஸ்.சி தேர்வு கால அட்டவணையை தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்: SSC Calendar 2019-2020:
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews