👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups


வருகிற 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை ஒருநாள் தான் என்றாலும், அதற்கான ஏற்பாடுகள், சந்திப்புகள் என 2 ,3 நாட்களுக்கு கொண்டாட்டங்கள் நீடித்திருக்கும். ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளி கொண்டாடப்பட உள்ளதால் தீபாவளிக்கு முந்தைய நாளும் பிந்தைய நாளும், வேலை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு தீபாவளிக்கு ஏறக்குறைய 5 நாட்கள் விடுமுறை விடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு விடுமுறை இல்லாத ஒரு சூழலை பள்ளிக்கல்வித்துறை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமை வேலை நாளாக இருந்தால் மாணவர் வருகையும் குறைவாகவே இருக்கும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு அதற்கு முந்தைய நாளான சனிக்கிழமை பள்ளி வேலை நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வெளியூர் செல்லும் மாணவர்களின் நலன் கருதி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.
26 மற்றும் 27ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தீபாவளி முடிந்த அடுத்த நாளான 28ம் தேதி திங்கட்கிழமை பள்ளி வேலை நாள் என்பதால் விடுமுறை தேவைப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்று உள்ளூர் விடுமுறை என்ற அடிப்படையில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. அவ்வாறு விடுமுறை எடுக்கும் பள்ளிகள் அதற்கு பதிலாக சனிக்கிழமை வேலை நாட்களாக செயல்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தீபாவளிக்கு முந்தைய நாள் சனிக்கிழமை என்பதால், அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று சர்ச்சைகள் எழுந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதாவது, தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு 26ம் தேதி சனிக்கிழமை 4வது வாரம் என்பதால் அன்று வழக்கம் போல் பள்ளி அலுவல் நாளாக இருக்கும்.
அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தால், சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்கு பயனளிக்கும் என்று கோரிக்கைகள் முன் வைக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 26ம் தேதி சனிக்கிழமை மற்றும் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதே சமயம், அக்டோபர் 28ம் தேதி திங்கட்கிழமை விடுமுறை தேவைப்படும் மாவட்டங்கள் உள்ளூர் விடுமுறை அறிவித்துவிட்டு, வேறொரு சனிக்கிழமையில் பள்ளி வேலை நாளாக அறிவிக்கலாம் என்றும், தேவைப்படும் பள்ளிகளும் விடுமுறை அறிவிக்கலாம் என்றும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அனுமதி பெற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.