பழைய பள்ளி கட்டடங்கள் மிரட்டுது மழை வருது...!  பட்டியல் தயாரித்தே பொழுது போகுது! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 01, 2019

Comments:0

பழைய பள்ளி கட்டடங்கள் மிரட்டுது மழை வருது...!  பட்டியல் தயாரித்தே பொழுது போகுது!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசுப்பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய கட்டடங்களின் பட்டியல் தயாரித்து, கடந்தாண்டே பொதுப்பணித்துறையிடம் அளித்தும், பிரத்யேக நிதி ஒதுக்காததால், இக்கட்டடங்களின் ஆபத்தான நிலை தொடர்கிறது. வடகிழக்கு பருவமழை நெருங்கும் நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும். தமிழகம் முழுக்க, அரசுப்பள்ளிகளில் இடியும் தருவாயில் உள்ள கட்டடங்கள் அப்புறப்படுத்த வேண்டுமென, செயலாளர் பிரதீப்யாதவ் கடந்தாண்டு நவம்பரில் அறிவிப்பு வெளியிட்டார்.கோவை மாவட்டத்திலும், இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில், சிதிலமடைந்த கட்டடங்களின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலை வகுப்பு வரை, செயல்படும் பள்ளிகள் வரை, தனித்தனியாக, பட்டியல் தயாரிக்கப்பட்டன. அதிகாரிகள் குழு, ஆய்வுக்குப் பின், பொதுப்பணித்துறை வசம், கடந்தாண்டு டிசம்பரில் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்படி, தொடக்க கல்வித்துறையின் கீழ், 353 பள்ளிகளில் 161 வகுப்பறை கட்டடங்கள், 163 சத்துணவு கூடங்கள், 112 கழிப்பறைகள், 20 பள்ளி சுற்றுச்சுவர் என, 314 வகை கட்டடங்கள், முற்றிலும் இடிக்க வேண்டிய நிலையில் உள்ளன.
அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் கிட்டத்தட்ட, 65 பள்ளி வகுப்பறைகள், இடிக்க வேண்டிய நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது.வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில், இக்கட்டடங்களை அப்புறப்படுத்த கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.சிதிலமடைந்த கட்டடங்கள் விரைவில் அப்புறப்படுத்தப்படும் என, அமைச்சர் செங்கோட்டையன் பலமுறை பேட்டி அளித்து விட்டார். ஆனால், நிதி ஒதுக்கியபாடில்லை. பழைய கட்டடங்கள் விவகாரத்தில், கல்வித்துறை தனது உறக்கத்தை கலைக்க வில்லையெனில், விபத்துக்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கு, பதில் சொல்லியாக வேண்டும். மறுபடியும் முதல்ல இருந்தா! இடிக்கப்பட வேண்டிய கட்டடங்கள் குறித்து, முதன்மை கல்வி அலுவலர் முருகனிடம் கேட்டபோது, ''காலாண்டு விடுமுறைக்குப் பின், இடிக்கப்பட வேண்டிய கட்டடங்கள் குறித்து, மீண்டும் பட்டியல் தயாரிக்கப்படும்,'' என்றார். தொடக்க கல்வித்துறையின் கீழ், 353 பள்ளிகளில் 161 வகுப்பறை கட்டடங்கள், 163 சத்துணவு கூடங்கள், 112 கழிப்பறைகள், 20 பள்ளி சுற்றுச்சுவர் என, 314 வகை கட்டடங்கள், முற்றிலும் இடிக்க வேண்டிய நிலையில் உள்ளன. அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் கிட்டத்தட்ட, 65 பள்ளி வகுப்பறைகள், இடிக்க வேண்டிய நிலையில் உள்ளன.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews