Breaking

Tuesday, October 08, 2019

தேசிய திறனாய்வு தேர்வுக்கு பிரத்யேக பயிற்சி கிடைக்குமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேசிய திறனாய்வு தேர்வுக்கு, பிரத்யேக பயிற்சி கிடைக்குமா என்ற ஆவல், அரசுப் பள்ளி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மத்திய மனிதவளத் துறை சார்பில், நன்கு படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க, ஆண்டுதோறும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம்.இரண்டு கட்டமாக நடத்தப்படும் தேர்வில், தேர்ச்சி பெறுவோருக்கு, பிளஸ் 1, பிளஸ் 2வில், மாதந்தோறும், 1,250 ரூபாய், பட்டப் படிப்புக்கு மாதம், 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.பாடத்திறன், மனத்திறன் அடிப்படையில், 200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கும். நடப்பு கல்வியாண்டில், நவம்பர், 3ல், முதல் கட்ட தேர்வு நடத்தப்படுகிறது. இதில் அரசுப் பள்ளி மாணவர்களும் பங்கேற்க, அனைத்து பள்ளிகளிலும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் தேர்வுக்கு தயாராக, போதிய பயிற்சி, வழிமுறைகளை கற்றுக் கொடுப்பதில்லை என்ற ஏக்கம் அதிகரித்துள்ளது. இது குறித்து, மாணவர்கள், பெற்றோர் கூறியதாவது:இத்தேர்வுக்கென தனியார் பள்ளிகளில், பல மாதங்களுக்கு, பிரத்யேக பயிற்சி தருகின்றனர். ஆனால், அரசு பள்ளிகளில், உரிய வழிகாட்டுதல், பயிற்சி இல்லை. கடந்த ஆண்டில், ஓரிரு மணி நேரம் மட்டும் பயிற்சி வகுப்பு நடத்தினர். இதனால், எவ்வித பயனும் கிடைக்கவில்லை.பள்ளிகளில் தினமும் இதற்கென பிரத்யேக பயிற்சியளித்தால், அரசுப் பள்ளி மாணவர்களும், உதவித்தொகை பெறும் நிலை உருவாகும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog