அந்த திட்டங்கள் என்ன?
இந்நிலையில் ஜியோ நிறுவனம் சத்தமில்லாமல் அதன் இரண்டு திட்டங்களை நீக்கியது,அந்த திட்டங்கள் என்ன? நீக்கியதற்க்கான காரணங்கள் என்ன? உள்ளிட்ட தகவல்களை முழுமையாக பார்ப்போம் வாங்க.
ரூ.19 மற்றும் ரூ.52
ஜியோ நிறுவனம் தற்சமயம் ரூ.19 மற்றும் ரூ.52 திட்டங்களைத் தான் நீக்கியுள்ளது. குறிப்பாக ரூ.19சாசெட் பேக் என்று கூறப்படும் திட்டம் ஆனது ஒரே ஒரு நாளைக்கு செல்லுபடியாகும் ஒரு ப்ரீபெய்ட் திட்டமாகும். பின்பு ரூ.52 திட்டமானது மொத்தம் ஏழு நாட்களுக்கு செல்லுபடியை கொண்டது ஆகும்.
இப்போது ரூ.19 மற்றும் ரூ.52 திட்டங்களை நீக்கிவிட்டதால், பயனர்களுக்கான காம்போ திட்டங்கள் ஆனது ரூ.98-ல் தொடங்குகிறது. இந்த 98ரூபாய் திட்டமானது 28நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாகும்.
ஜனவரி மாதம்
குறிப்பாக பயனர்கள் ஐ.யூ.சி டாப்-அப்களுடன் சேர்ந்து சாசெட் பேக்குகளை ரீசார்ஜ் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதால் ஜியோ நிறுவனம் இதை நீக்கியுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த சாசெட் திட்டங்கள் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது
1.05ஜிபி அளவிலான டேட்டா
அதேபோல் ரூ.52-திட்டமானது 1.05ஜிபி அளவிலான டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள், 70எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை ஏழு நாட்கள் செல்லுபடியாகும் காலத்தி;ன் கீழ் வழங்கியது. குறிப்பாக இந்த 52ரூபாய் திட்டமானது JioTV, JioCinema, JioSaavn போன்ற ஆப்ஸ்களுக்கான அணுகலையும் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.