இலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி ? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 13, 2019

Comments:0

இலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி ?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்தியாவின் மிகப்பெரிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணமாக வசூலிக்கபடும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் , முதன்முறை சலுகையாக 30 நிமிடம் இலவசமாக மற்ற நெட்வொர்க் அழைப்புகளை மேற்கொள்ள வழி வகுத்துள்ளது.
"ஜியோ வாடிக்கையாளர்கள் முதல் முறையாக தங்கள் எண்ணிற்கு IUC ரீசார்ஜ் செய்யும் போது 30 நிமிடங்கள் இலவச டாக் டைம் கிடைக்கும். தானாகவே ரீசார்ஜ் செய்த நாளிலிருந்து முதல் ஏழு நாட்களுக்கு மட்டும் இந்த ஒரு முறை சலுகை கிடைக்கும், "என்று ET அறிக்கையில் தெரிய வந்துள்ளது. "இது சந்தாதாரர்களுக்கு ஒரு சுமூகமான முறையில் கட்டண சேவையின் மாற்றத்திற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது"
நெட்வொர்க் இணைப்பு கட்டணங்கள் அல்லது ஒன்றோடொன்று பயன்பாட்டு கட்டணங்கள் (ஐ.யூ.சி) காரணமாக ரூ .13,500 கோடியை செலுத்த வேண்டி உள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் வெளிப்படுத்தியது. இதன் காரணமாகவே இந்நிறுவனம், IUC டாப் அப் ரீசார்ஜ் பிளான்களை அறிவித்தது. அதேவேளை ஜியோ டூ ஜியோ அழைப்புகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
ஜியோ IUC டாப் அப் கட்டணம் மற்றும் சலுகைகள்
ரூ.10 கட்டணத்திற்கு ஜியோ டூ மற்ற நெட்வொர்க்குகளுக்கு 124 நிமிடங்கள் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.20 கட்டணத்திற்கு ஜியோ டூ மற்ற நெட்வொர்க்குகளுக்கு 249 நிமிடங்கள் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.50 கட்டணத்திற்கு ஜியோ டூ மற்ற நெட்வொர்க்குகளுக்கு 656 நிமிடங்கள் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.100 கட்டணத்திற்கு ஜியோ டூ மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1362 நிமிடங்கள் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.500 கட்டணத்திற்கு ஜியோ டூ மற்ற நெட்வொர்க்குகளுக்கு 7,012 நிமிடங்கள் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.1000 கட்டணத்திற்கு ஜியோ டூ மற்ற நெட்வொர்க்குகளுக்கு 14074 நிமிடங்கள் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு வேளை உங்களுக்கு டேட்டா மற்றும் ஜியோ டூ ஜியோ அழைப்புகள் மட்டும் போதும் என்றால் நீங்கள் கூடுதல் டாப் அப் செய்ய தேவையில்லை. ஒவ்வொரு ரூ. 10 ஐயூசி கட்டணத்தை பயன்படுத்தினால் 1ஜிபி கூடுதல் டேட்டா வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் 1000 ரூபாய் பயன்படுத்தினால் 100 ஜிபி டேட்டா வழங்கப்படலாம்
நிமிடத்துக்கு ஆறு காசு கட்டணம் விதிக்க உள்ளதாக அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ தற்போது 30 நிமிட இலவச அழைப்பு அளிப்பு குறித்து அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ தொலை தொடர்பு நிறுவனம் அழைப்புக்கள் அனைத்தும் இலவசம் என்னும் அறிவிப்பின் மூலம் மக்களைக் கவர்ந்தது. இதன் மூலம் அதன் போட்டியாளர்களான ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களைக் குறைக்கும் நிலை ஏற்பட்டது. பல வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோவுக்கு மாறியதால் பல தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்தன. இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சமீபத்திய அறிவிப்பில் இலவச அழைப்புக்களை ரத்து செய்தது. அதாவது ஜியோவில் இருந்து வேறு நிறுவனத்துக்கு அழைக்கும் போது அதற்கு நிமிடத்துக்கு 6 காசுகள் கட்டணம் விதிக்கப்பட உள்ளது. இந்த பணத்துக்கு ஈடாக இணையச் சேவை இலவசமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆயினும் ஜியோ வாடிக்கையாளர்கள் இதனால் கடும் அதிருப்தி அடைந்தனர்.
சமூக வலைத்தளங்களில் ஜியோ மீதான கடுமையான விமர்சனம் இன்னும் நடைபெற்று வருகிறது. அதே வேளையில் ஜியோவின் போட்டி நிறுவனங்களான ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் மாறுவதால் அந்நிறுவனங்கள் கடும் மகிழ்ச்சியில் உள்ளன. இதையொட்டி ஜியோ ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜியோவின் கட்டண உயர்வு வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வர உள்ளது. அதற்குள் வாடிக்கையாளர்கள் குறையக் கூடும் என்னும் ஊகத்தினால் ஜியா நிறுவனம் 30 நிமிடம் இலவச அழைப்புக்களை அளிக்க முன் வந்துள்ளது. ரீசார்ஜ் செய்த 7 நாட்களுக்குள் இந்த 30 நிமிட இலவச அழைப்புக்கள் செய்ய முடியும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews