EMIS இணைய தளத்தில், ஒரு பருவத்திற்கான கால அட்டவணையை உள்ளீடு செய்து, அதை வாராவாரம் எவ்வாறு மேம்படுத்துவது? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 05, 2019

EMIS இணைய தளத்தில், ஒரு பருவத்திற்கான கால அட்டவணையை உள்ளீடு செய்து, அதை வாராவாரம் எவ்வாறு மேம்படுத்துவது?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இதில் 4 நிலைகள் உள்ளன. நிலை 1 : School Menu வில் உள்ள Timetable க்கு சென்று, அதில் Term Time table ஐ Click செய்யவும். இதில் Select Term என்பதில் Term 1 என்பதை Click செய்யவும். Select Class என்பதில் முதல் வகுப்பையும், Select Section என்பதில் உரிய பிரிவையும் (உதாரணம் பிரிவு A) தேர்வு செய்து Submit தரவும். பிறகு திங்கள் முதல் சனி வரை, மேலே தேர்வு செய்த வகுப்பு மற்றும் பிரிவுக்குரிய கால அட்டவணையை உள்ளீடு செய்து Save செய்யவும். இதே போல் பள்ளியில் உள்ள அனைத்து வகுப்புகள், பிரிவுகளுக்கும் கால அட்டவணையை உள்ளீடு செய்து Save செய்யவும். நிலை 2 : குறிப்பிட்ட வாரத்திற்கான (திங்கள் முதல் ஞாயிறு வரை) கால அட்டவணையை மேம்படுத்தும் முன்னர், time table ல் உள்ள Assign Holidays ஐ தேர்வு செய்து, மேலே குறிப்பிட்ட வாரத்திற்கான (திங்கள் முதல் ஞாயிறு வரை) பள்ளி விடுமுறை நாட்களை, To Full School என்பதை தேர்வு செய்து, விடுமுறை தேதி மற்றும் அதற்கான காரணத்தை உள்ளீடு செய்து Save தரவும். நிலை 3 : time table ல் உள்ள Copy time table என்பதை தேர்வு செய்து, option 1 ல் இருக்கும், Assign Term time table என்பதை ஒவ்வொரு வகுப்பிற்கும் Click செய்யவும். உடனே வலது புறம் உள்ள Status ல் Assigned என பச்சை வண்ணத்தில் தோற்றமளிக்கும். நிலை 4 : time table ல் உள்ள Create time table ஐ தேர்வு செய்யவும். வகுப்பு மற்றும் பிரிவை தேர்வு செய்து Submit தரவும்.
இப்போது Term time table லில் இருந்து, இந்த வாரத்திற்கு நாம் Copy செய்த time table திரையில் தோன்றும். இத்துடன் நாம் உள்ளீடு செய்திருந்த பள்ளி விடுமுறை நாட்களும், மஞ்சள் நிற பின்னணியில் தோன்றும். இப்போது வலது புறம், கீழே உள்ள Save என்பதை Click செய்தால், குறிப்பிட்ட வாரத்திற்காக கால அட்டவணை எமிஸ் இணைய தளத்தில் Save ஆகி விடும். இதே போல் பள்ளியில் உள்ள அனைத்து வகுப்புகள் மற்றும் பிரிவுகளுக்கும் Create time table ல் Save தர வேண்டும். Save ஆகி உள்ளதா என்பதை எவ்வாறு உறுதி படுத்துவது? 1. Print மூலம் உறுதி படுத்தலாம். 2. View class Wise time table மூலம் உறுதி படுத்தலாம். 3. View teacher wise time table மூலம் உறுதி படுத்தலாம். அடுத்தடுத்த வாரங்களுக்கான கால அட்டவணையை இப்போதே எமிஸ் இணைய தளத்தில் உள்ளீடு செய்ய முடியுமா? ஒரு சில நவீன இயங்குதள வசதி கொண்ட மற்றும் தேடுபொறிகள் கொண்ட கணினிகளில், அடுத்தடுத்த வாரங்களுக்கான கால அட்டவணையை முன்கூட்டியே பதிவு செய்ய முடியும். இத்தகைய வசதிகள் கொண்ட பள்ளிகள், வேலை நாட்களின் முதல் நாளான திங்கள் கிழமை வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலேயே, அடுத்த வாரத்திற்கான கால அட்டவணையை உள்ளீடு செய்ய முடியும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews