தொடரும் அறிவியல் திருட்டுகள்: இளம் விஞ்ஞானிகள் வேதனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 29, 2019

Comments:0

தொடரும் அறிவியல் திருட்டுகள்: இளம் விஞ்ஞானிகள் வேதனை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அறிவியலும், அது சார்ந்த தொழில் நுட்பங்களும், அதனை பின்புலமாக கொண்ட அரிய படைப்புகளும் நாளுக்கு நாள் பெருகி, நம்மை வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. இவற்றில் பலவற்றை, நம்மில் ஒருவர் கண்டுபிடித்திருப்பார். ஆனால், அயல்நாட்டுக்காரர் அதை கண்டு பிடித்ததாக பெருமை பேசிக் கொண்டிருப்போம். விழிப்புணர்வு இல்லாததால் இது போன்ற அறிவியல் திருட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது, இளம் விஞ்ஞானிகளை ேவதனையில் ஆழ்த்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த மருதேரியை சேர்ந்தவர் சிபுவசந்தகுமார்(39). டிசிஎஸ் பட்டம் பெற்ற இவர், சிறுவயதிலேயே அறிவியல் ஆர்வம் கொண்டவர். சோலார் பயன்பாடு குறித்த கட்டுரை ஒன்றுக்காக விளக்கம் அளித்து, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கு இவர் அனுப்பிய கடிதமும், அதற்கு பிறகு அவர் அளித்த ஊக்கமும் சிபுவசந்தகுமாரை நவீன கண்டுபிடிப்புகளின் பக்கம் திருப்பியது. இதையடுத்து கடந்த 2008ம் ஆண்டு, சோலார் மின்சாரத்தை பயன்படுத்தி, செல்போன் பேட்டரியை இயக்கும் நுட்பத்ைதயும், 2009ம் ஆண்டு மொபைலில் இருந்து பணப்பரிமாற்றம் செய்வதற்கான ஆப் ஒன்றையும் கண்டு பிடித்தார். ஆனால் 2013ம் ஆண்டில் செல்போனுக்கு சேலார் பயன்பாட்டை அமெரிக்க இளைஞர் ஒருவர் கண்டுபிடித்ததாகவும், 2015ம் ஆண்டு மின்னணு பணப்பரிமாற்றத்ைத, அமெரிக்காவை சேர்ந்த மற்றொருவர் கண்டுபிடித்ததாகவும் காப்புரிமை பெறப்பட்டு, அது பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது சிபுவசந்தகுமார், தனது கண்டு பிடிப்புகளுக்கான காப்புரிமையை எப்படி மீட்பது என்ற வேதனையில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரை போன்று தமிழகத்தில் பல இளம் விஞ்ஞானிகள் அரிய படைப்புகளை கண்டுபிடித்தும், அவற்றை காப்புரிமைக்கு பதிவு செய்வதற்குரிய விழிப்புணர்வு இல்லாததால் முயற்சிகள் வீணாகி கொண்டிருக்கிறது என்ற ஆதங்கம் அனைவரிடமும் எழுந்துள்ளது. இது குறித்து அறிவியல் ஆய்வாளர்கள் கூறியதாவது: இது போன்ற அறிவுத் திருட்டுகளைத் தடுப்பதற்கு ‘பேடன்ட்’ எனப்படும் காப்புரிமை வசதி இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை காப்புரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது. காப்புரிமை குறித்த விழிப்புணர்வு, இளம் விஞ்ஞானிகளிடம் இல்லாதது வேதனைக்குரியது. அறிவுசார் சொத்துரிமையின் கீழ் பல்வேறு விஷயங்கள் வருகிறது. டிரேட் மார்க் எனப்படும் வணிக முத்திரைகள், கண்டுபிடிப்புகளின் டிசைன் எனும் வடிவங்கள், புவிசார் குறியீடுகள், காப்பிரைட் எனப்படும் படைப்பாக்க உரிமை மற்றும் பேடன்ட் எனப்படும் காப்புரிமை ஆகியவை அவற்றில் முக்கியமானவை.
சென்னை அலுவலகம் பேடன்ட், டிரேட் மார்க் மற்றும் புவிசார் குறியீடுகளுக்கானது. தென்னிந்திய மாநிலங்கள் அனைத்துக்கும் தலைமை அலுவலகம் இது. இதுபோன்ற அலுவலகங்கள் மும்பை, கொல்கத்தா, டெல்லியிலும் உள்ளன. இந்தியாவில் இப்படி வரும் விண்ணப்பங்களில் சுமார் 85 சதவீதம் வெளிநாட்டினருடையது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக தொழில்நுட்ப படிப்புகளை முடித்து ஆயிரக்கணக்கானோர் வெளிவருகின்றனர். இவர்கள் செய்யும் இறுதியாண்டு ப்ராஜெக்ட்டில் பத்து சதவீதம் காப்புரிமை அலுவலகத்துக்கு வந்தாலே போதும். அவை அறிவியல் வளர்ச்சிக்கு பெருமளவில் உதவும். இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர். மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும் பாதிக்கப்பட்ட சிபுவசந்தகுமார் கூறுகையில், ‘‘பேடன்ட் அலுவலகத்தில் ஆங்கிலத்தில் விபரங்களை பதிவு செய்ய வேண்டும், ஆங்கிலத்திலேயே அதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்பது விதிமுறையாக உள்ளது. இதே போல், சட்டம் சார்ந்த சில விளக்கங்களை அளிப்பதிலும், தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே, அரிய கண்டுபிடிப்புகளுடன் காப்புரிமை கேட்டு பேடன்ட் அலுவலகத்திற்கு வரும் விஞ்ஞானிகளுக்காக, இலவச வழக்கறிஞர்களை அரசு நியமிக்க வேண்டும். பிற நாடுகளில் ஒருவரது கண்டுபிடிப்புக்கான காப்புரிமை வசதிகள் அனைத்ைதயும், அரசே முன்னின்று செய்து கொடுக்கிறது. இதை இந்தியாவிலும் மத்திய, மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும். தற்போது கூட, அரசு உதவினால் எனது கண்டு பிடிப்புகளுக்கான காப்புரிமையை நாமே பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் இருக்கிறது,’’ என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews