அடுத்தடுத்து பொதுத்தேர்வு - என்னவாகும் எதிர்கால சமுதாயம் - விரிவான அலசல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 23, 2019

1 Comments

அடுத்தடுத்து பொதுத்தேர்வு - என்னவாகும் எதிர்கால சமுதாயம் - விரிவான அலசல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பெரும்பாலான கல்வியாளர்கள், நிபுணர்கள், ஆய்வாளர்கள் எதிர்த்துள்ள நிலையில், கவலையை வெளிப்படுத்திய நிலையில், 5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்தது என்பது குழந்தைகளுக்கு எதிரான ஒருவித வன்முறை தானே. ரசியல்வாதிகளின் அதிகார வளையத்துக்குள் சிக்கி, பொதுமக்களை வதைக்கும் பல விஷயங்களில் கல்வி மிக முக்கியமானது. கடைச்சரக்காகி விட்ட கல்வி இப்போது அரசியல் ஆக்கப்படுகிறதா என்ற கேள்வி சாமான்ய மக்களின் மனதில் எழ ஆரம்பித்து விட்டது.
அகில இந்திய அளவில் பன்னெடுங்காலமாக கல்வியில் பெரும் புரட்சியை செய்தது தமிழகம் தான். பல அறிஞர்கள்,விஞ்ஞானிகள், வல்லுனர்கள் உருவான பூமி இது. சத்துணவு திட்டத்தை கொடுத்த காமராஜில் துவங்கி, கலைஞர், எம்ஜிஆர் ஆகியோர் முதல்வர்களாக இருந்தபோது, கல்வியை எங்கும் கொண்டு போய்ச்சேர்த்து பெரும் சமூக மாற்றங்கள் உருவானது என்பது அரசியல் அறிந்தவர்களுக்கு தெரியும். சத்தான உணவை தந்து, மிடுக்கான சீருடையில் வலம் வரச்செய்து, இலவசமாக பாடபுத்தகங்கள், சைக்கிள் எல்லாம் தந்தாலும், மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்பதன் மூலம் பெரும் சீர்கேட்டுக்கு வழிவகுத்து விட்டதா தமிழக அரசு என்று கல்வியாளர்கள் வேதனைப்படுகின்றனர். எந்த கல்விக்காக கிராமங்களில் குழந்தைகளை ஈர்க்க இவற்றை எல்லாம் தந்தார்களோ, அதே கல்வி இப்போது பிஞ்சுகளை மனஅழுத்தத்துக்குள் தள்ளி விடும் அபாயம் உள்ளது.
பொதுத்தேர்வை பிஞ்சுகளிடம் திணிக்கும் புதிய கல்விக் கொள்கையால், மீண்டும் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தும் போக்கு அதிகரிக்கும் என்பதை நாம் உணர வேண்டும். கல்வி என்பது கல்வியாளர்கள் கையில் தான் இருக்க வேண்டும்; அதை கேலிக்கூத்தாக்கும் அளவுக்கு அரசியல்வாதிகள் ‘போட்டுடைக்க’ வேண்டாம் என்பது தான் பெற்றோர்களின் ஆதங்கம். ஏற்கனவே பல அரசு பள்ளிகளை மூடி நூலகமாக மாற்றுகிறது அரசு; இன்னொரு பக்கம் இந்தி திணிப்புக்கு முயற்சி நடக்கிறது. இப்படி சிக்கித்தவிக்கின்றனர் மாணவர்கள். எதிர்கால சமுதாயம் சின்னாபின்னமாக அனுமதிக்க கூடாது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

1 comment:

  1. Іt's wonderfful thnat үou are getting th᧐ughts from thіs paragrаph as well
    as from our argument maⅾce heгe.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews