👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
2018-19-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை மொத்தம் 5.65 கோடி பேர் தாக்கல் செய்துள்ளதாக, வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
இது கடந்த 2017-18-ஆம் நிதியாண்டைக் காட்டிலும் 4 சதவீதம் அதிகமாகும். 2017-18-ஆம் நிதியாண்டில் 5.42 கோடி பேர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இதுகுறித்து வருமான வரித் துறையின் கீழ் இயங்கும் மத்திய நேரடி வரிகள் வாரியம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
2018-19-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதில், இதுவரை இல்லாத அளவில், மொத்தம் 5.65 கோடி பேர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளனர். குறிப்பாக, ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை மொத்தம் 1,47,82,095 பேர் இணைய வழி மூலமாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தனர்.
ஆகஸ்ட் 31-ஆம் தேதி மட்டும் 49,29,121 பேர் இணைய வழி மூலமாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளனர். 2017-18-ஆம் நிதியாண்டில் 5.42 கோடி பேர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்திருந்தனர்.
நிகழாண்டில் (2018-19) மொத்தம் 5.65 கோடி பேர் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் 2.86 கோடி பேர் (79 சதவீதம் பேர்) இணைய வழியில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளனர்.
வருமான வரிக் கணக்குகள் இணைய வழி மூலமாக அதிக அளவில் தாக்கல் செய்யப்பட்டிருந்த காலகட்டத்தில், வருமான வரித் துறையின் வலைதளப்பக்கத்தை சீர்குலைப்பதற்கான முயற்சிகள் நடந்தன. அதுபோன்ற 2,205 ஊடுருவல் முயற்சிகளை வருமான வரித் துறையின் தகவல் பாதுகாப்புக் குழு முறியடித்துவிட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U