இந்தியாவில் இனி 11 இலக்க மொபைல் எண்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 23, 2019

1 Comments

இந்தியாவில் இனி 11 இலக்க மொபைல் எண்கள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தற்போது இந்தியாவில் 10 இலக்க மொபைல் எண்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை 11 இலக்கமாக மாற்றலாமா என டிராய் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது நாளுக்கு நாள் மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகத்திவருவதனால் 11 இலக்கமாக மாற்றலாம என டிராய் ஆலோசனைகள் நடத்தி வருகிறது. தற்போதுள்ள மொபைல் எண்கள் அனைத்துமே 9, 8, 7 ஆகிய எண்களில் தொடங்கும். இதில் மொத்தம் 210 கோடி எண்கள் உருவாக்க முடியும். ஆனால் தற்போது மொபைல் போன்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதே நிலை தொடரும் போது 2050க்குள் 260 கோடி எண்கள் தேவைப்படும். இதனால் இலக்கங்களைப் 11ஆக அதிகரிக்கும் போது கூடுதல் எண்கள் கிடைக்கும் என டிராய் ஆலோசித்து வருகிறது.
அதேபோல் டாங்கில் போன்று இணையத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படும் எண்களுக்கும் 11 இலக்கங்கள் கொடுத்து, 3, 5, 6 ஆகிய இலக்கங்களில் தொடங்கும் படி மாற்றலாம் எனவும் டிராய் ஆலோசித்து வருகிறது. இதற்கு முன்பாக இந்தியாவில் இதே போன்று இரண்டு முறை 1993 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் இலக்கங்கள் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2003ஆம் ஆண்டு மாற்றம் கொண்டுவரப்பட்ட போது கூடுதலாக 75 கோடி எண்கள் கூடுதலாகக் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

1 comment:

  1. Có thể sẽ phải thay thế linh kiện điện tử trên chúng.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews