ஓய்வூதியம் பெற இணையவழி விண்ணப்ப வசதி: அமைச்சர் தொடங்கி வைத்தார் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 15, 2019

ஓய்வூதியம் பெற இணையவழி விண்ணப்ப வசதி: அமைச்சர் தொடங்கி வைத்தார்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஓய்வூதியம் பெறுவதற்கான இணையவழி ஒரு பக்க விண்ணப் பம், வெளிநாடு வாழ் இந்தியர் களுக்கான தனி இணையவழி மனு பரிசீலனை முகப்பு ஆகியவற்றை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 29 லட்சத்து 50 ஆயி ரம் பயனாளிகள் மாதம்தோறும் ரூ.1,000 ஓய்வூதியமாக பெறுகின் றனர். தற்போதுள்ள நடைமுறை யில் ஓய்வூதியம் கோரி மனுக் களை சமர்ப்பிக்க மனுதாரர்கள் வட்டாட்சியர், வருவாய் கோட் டாட்சியர் அல்லது மாவட்ட ஆட்சி யர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டியுள்ளது. மேலும், மனுவுடன் வயது, இருப்பிடம், வருமான சான்றிதழ்களை இணைக்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில் மனுவின் நிலையைப் பற்றி அறிந்து கொள்ள இயலாத நிலை உள்ளது.இந்த சிரமத்தை போக்கும் வகை யில், 'இணையவழி ஒரு பக்க விண்ணப்பம்' திட்டம் செயல் படுத்தப்பட உள்ளது.
குறுஞ்செய்தி மூலம் தகவல்: இம்முறையில் மனுதாரர்கள் தங்கள் மனுக்களை அருகில் உள்ள இ-சேவை அல்லது பொது சேவை மையத் தில் பதிவு செய்யலாம். மேலும், தங்கள் மனுக்களின் நிலையை எவ்விடத்திலும் எந்த நேரத்திலும் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். மனுவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட விவரம் உடனடியாக குறுஞ்செய்தி மூலம் அவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
மேலும், மனுதாரரால் தெரிவிக்கப்படும் வயது, இருப்பிடம், வருமானம் ஆகிய விவ ரங்களை கிராம நிரவாக அலுவலர் சரிபார்த்து, சான்றுகளுடன் வரு வாய் ஆய்வாளருக்கு அனுப்பி, தகுதிகள் சரிபார்க்கப்படும். அதன் பின் பயனாளிகளுக்கு ஆணை பிறப்பிக்க வட்டாட்சியருக்கு அனுப்பப்படும். இந்த முறையில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் 100 சதவீதம் கணக்கில் கொள்ளப்படுவது உறுதி செய்யப்படும். அதேபோல், இந்தியர்களுக் கான மனு பரிசீலனை முகப்பு ஒன்றை தமிழக அரசு இணைய வழியில் செயல்படுத்தி வருகிறது. இதை வெளிநாடு வாழ் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந் நிலையில், இவர்களுக்கென தனி இணையதளம் உருவாக்கப் பட்டுள்ளது. இதன் மூலம், வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பு வதுடன், மனுக்கள் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகளின் விவரங் களையும் தெரிந்து கொள்ள இயலும். எழிலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்த இரண்டு திட்டங் களையும் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் தொடங்கி வைத்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews