உடைந்த ஸ்க்ரீன் மொபைலை பயன்படுத்துகிறீர்களா? இதோ உங்களுக்கு ஒரு எச்சரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 09, 2019

உடைந்த ஸ்க்ரீன் மொபைலை பயன்படுத்துகிறீர்களா? இதோ உங்களுக்கு ஒரு எச்சரிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மொபைல் போன்களில் ஸ்க்ரீன் பாதுகாப்பு என்பது ஸ்க்ரீனை மட்டும் பாதுகாப்பது அல்ல, ஸ்க்ரீனில் இருந்து உங்கள் கைகளையும் பாதுகாப்பதுதான். மொபைல் போனை பயன்படுத்தும்போது திடீரென ஏற்படும் அசம்பாவிதம் காரணமாக உங்கள் ஸ்க்ரீனில் ஏற்படும் ஸ்க்ராட்ச் உங்கள் கைகளை பதம் பார்த்துவிட கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் மொபைல் ஸ்க்ரீனில் இருந்து உங்கள் கைகளை பாதுகாத்து கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் ஸ்க்ரீனினால் ஏற்படும் சில அசம்பாவிதங்கள் உங்களுக்கு தீராத வலியை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவருடைய விரல் மற்றும் உள்ளங்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது ஒரு சிறிய கீரல் மொபைல் போன் ஸ்க்ரீனில் இருந்தால் கூட அதனை பெரிதுபடுத்தாமல் பயன்படுத்துபவர்களுக்கு சில விபரீதங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உதாரணமாக ஒரு மலேசிய நபர் ஸ்க்ரீன் பாதிக்கப்பட்ட மொபைல் போனை பயன்படுத்தியதால் அவருடைய விரல் மற்றும் உள்ளங்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடைந்த மொபைல் ஸ்க்ரீனில் உள்ள கண்ணுக்கு தெரியாத சில துகள்கள் அவருடைய கைகளை பாதித்துள்ளது.
23 வயது அசுவான் இக்பால் அப்துல்லா: அதே போல் 23 வயது அசுவான் இக்பால் அப்துல்லா என்பவர் உடைந்த ஸ்க்ரீனை உடைய மொபைல் போனை சில காலம் பயன்படுத்தி வந்துள்ளார். ஒருசில மாதங்கள் கழித்து அவருடைய விரல்களில் ஒரு விசித்திரமாக வீக்கம் தோன்றியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்தபோது வீக்கம் மட்டுமின்றி சில சின்னச்சின்ன கரும்புள்ளிகளும் இருப்பதை அறிந்தார்.
விசித்திரமான பாக்டீரியா: இதுவொரு விசித்திரமான பாக்டீரியாவால் வருவது என்றும் இதுவொரு தொற்று நோய் என்றும் மருத்துவர் கூறியதை கேட்டு அதிர்ந்தார். நாளடைவில் அவருக்கு வலி அதிகமாகி மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளப்படது. சரியான நேரத்தில் மருத்துவர்கள் அதன் காரணத்தை கண்டுபிடித்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ததால் அவருடைய கை தப்பித்தது.
மிகப்பெரிய பாதிப்பு தவிர்க்கப்பட்டது: அவருடைய கைகளில் இருந்த ஸ்க்ரீனில் உள்ள துகள்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டதால் அவருக்கு வரவிருந்த மிகப்பெரிய பாதிப்பு தவிர்க்கப்பட்டது. இன்னும் சில காலம் அவர் இதனை கவனிக்காமல் இருந்திருந்தால் அவர் தன்னுடைய கட்டை விரலை இழந்திருக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கும். நல்லவேளையாக சரியான நேரத்தில் கவனிக்கப்பட்டதால் அவர் தப்பித்து கொண்டார்.
கட்டை விரல் இருந்திருக்காது: இதுகுறித்து இக்பால் கூறியபோது, 'ஒரு மொபைலில் உள்ள உடைந்த ஸ்க்ரீனால் இவ்வளவு பெரிய பாதிப்பு வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் மட்டும் கொஞ்சம் சிகிச்சை எடுத்து கொள்ள தாமதித்திருந்தால் இன்று எனக்கு கட்டை விரல் இருந்திருக்காது' என்று தெரிவித்தார். எனவே ஒரு மொபைல் ஸ்க்ரீன் உடைந்தால் உடனே அதனை நான் மாற்றியிருக்க வேண்டும். ஸ்க்ரீனை மாற்றாமல் உடைந்த ஸ்க்ரீனை பயன்படுத்தியதால் வந்த விளைவை நான் புரிந்து கொண்டேன்.
உடனடியாக மாற்றிவிடுங்கள்..: சிகிச்சை முடிந்ததும் நான் செய்த முதல் வேலை ஸ்க்ரீனை மாற்றியதுதான். எனவே என்னுடைய அனுபவத்தை ஒரு பாடமாக எடுத்து கொண்டால் யாருக்காவது மொபைல் ஸ்க்ரீன் பாதிப்பு அடைந்திருந்தால் உடனடியாக மாற்றிவிடுங்கள், இல்லாவிட்டால் எனக்கேற்பட்ட பிரச்சனை உங்களுக்கும் நேரும்' என்று கூறியுள்ளார். அறுவை சிகிச்சை செய்து கொள்வதை விட செலவு குறைவுதான் ஒரு மொபைலில் ஸ்க்ரீன் உடைந்துவிட்டால் அதை மாற்றுவது கொஞ்சம் செலவு அதிகமாகத்தான் செய்யும். ஆனால் அதே நேரத்தில் அதனால் பிரச்சனை ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொள்வதை விட செலவு குறைவுதான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த அனுபவங்களில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பாடம் ஆகும்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews