கரும்பு சாகுபடி தொழில்நுட்ப சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 09, 2019

கரும்பு சாகுபடி தொழில்நுட்ப சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
கரும்பு சாகுபடி தொழில்நுட்ப சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடலூர் செம்மண்டலத்தில் செயல்பட்டு வரும் கரும்பு ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் திறந்தவெளி மற்றும் தொலைதூர இயக்ககம் சார்பில், 16 வகையான சான்றிதழ் படிப்புகளை நடத்தி வருகிறது. அதன்படி, கடலூர் செம்மண்டலத்தில் செயல்பட்டு வரும் கரும்பு ஆராய்ச்சி பண்ணையில் நவீன கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த 6 மாத கால சான்றிதழ் படிப்பு நடத்தப்படுகிறது. மாதத்துக்கு ஒரு ஞாயிற்றுக்கிழமை வீதம் 6 வகுப்புகள் நடத்தப்படும். பயிற்சிக் கட்டணமாக ரூ. 2 ஆயிரம் செலுத்த வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்தப் பயிற்சியில் சேரலாம். இறுதி வகுப்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். இந்தச் சான்றிதழ் படிப்பு சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயம் தொடர்பான வேலைவாய்ப்புக்கு உதவிகரமானதாக விளங்குகிறது.
இந்தச் சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பங்களை ரூ. 5-க்கான தபால் தலை ஒட்டிய, சுய முகவரியிட்ட உறையுடன் இணைத்து, "இயக்குநர், திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி இயக்ககம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயமுத்தூர்- 641 003' என்ற முகவரிக்கு அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், பயிற்சிக் கட்டணத்தை w‌w‌w.‌o‌n‌l‌i‌n‌e‌s​b‌i.​c‌o‌m என்ற முகவரியில் செலுத்தி, மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு கடலூரில் உள்ள கரும்பு ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ஜி.சண்முகத்தை 94432 57056 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews