உலக வரலாற்றில் இன்று July 4 - விவேகானந்தர் இறப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 04, 2019

உலக வரலாற்றில் இன்று July 4 - விவேகானந்தர் இறப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

நிகழ்வுகள்
414 – 13 வயது பேரரசன் இரண்டாம் தியோடோசியசு அதனது தமக்கை ஏலியா புல்சேரியாவுக்குத் தனது அதிகாரங்களைக் கொடுத்தான். ஏலியா அரசப் பிரதிநிதித் தன்னை கிழக்கு உரோமைப் பேரரசியாகத் தன்னை அறிவித்தாள்.
1054 – எஸ்என் 1054 என்ற சூப்பர்நோவா சொங் சீனர்களாலும், அரேபியர்களாளும் டாரசு விண்மீன் கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது. இதன் எச்சங்கள் நண்டு வடிவ நெபுலாவாக உருவெடுத்தது.
1187 – சிலுவைப் போர்கள்: சலாகுத்தீன் எருசலேம் மன்னர் லூசிக்னனின் கை என்பவரை வென்றார்
1456 – உதுமானிய-அங்கேரிப் போர்கள்: பெல்கிறேட் மீதான முற்றுகை ஆரம்பமானது.
1534 – மூன்றாம் கிறித்தியான் டென்மார்க்-நோர்வே மன்னராக முடிசூடினார்.
1610 – குளூசினோ நகரில் போலந்து-லித்துவேனியாவுக்கும், உருசியாவுக்கும் போர் இடம்பெற்றது.
1776 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஐக்கிய அமெரிக்கா விடுதலை பெறும் அமெரிக்க விடுதலைச் சாற்றுரையை அமெரிக்க காங்கிரசு ஏற்றுக் கொண்டது.
1803 – லூசியானா விலைக்கு வாங்கப்பட்ட செய்தி அமெரிக்க மக்களுக்கு அறிவிக்கப்படட்து.
1826 – அமெரிக்காவின் 3வது அரசுத்தலைவர் தாமசு ஜெஃபர்சன், 2ம் அரசுத்தலைவர் ஜான் ஆடம்ஸ் இறந்த அதே நாளில் இறந்தார். இதே நாளிலேயே அமெரிக்க விடுதலைச் சாற்றுரை 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்றுக்கொளப்பட்டது.
1827 – நியூயார் மாநிலத்தில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
1837 – உலகின் முதலாவது அதி-தூர தொடர்வண்டிப் போக்குவரத்து, பர்மிங்காம், லிவர்பூல் நகர்களுக்கிடையே தொடங்கப்பட்டது.
1862 – லூயிஸ் கரோல் ஆலிசு லிடெலுக்கு ஒரு கதையைச் சொன்னார். இதுவே பின்னர் ஆலிசின் அற்புத உலகம் என வழங்கப்பட்டது.
1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மிசிசிப்பி, விக்சுபர்க் நகரம் 47 நாட்கள் முற்றுகையின் பின்னர் யுலிசீஸ் கிராண்ட் தலைமையிலான அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தது.
1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வடக்கு வர்ஜீனியா இராணுவம் கெட்டிசுபெர்க்கு சண்டையில் தோல்வியடைந்ததை அடுத்து அங்கிருந்து விலக ஆரம்பித்தது.
1879 – ஆங்கில-சூலூ போர் உலுண்டி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரின் பின்னர் முடிவுக்கு வந்தது.
1892 – சமோவா தனது பன்னாட்டு நாள் கோட்டில் மாற்றங்களை ஏற்படுத்தியது. இதன்படி, திங்கட்கிழமை (சூலை 4) இரண்டு நாட்களாக வந்ததில், சமோவாவில் இவ்வாண்டு 367 நாட்களைக் கொண்டிருந்தது.
1898 – நியூயார்க்கில் இருந்து லே ஆவர் சென்று கொண்டிருந்த கப்பல் சேபில் தீவுக்கு அருகில் வேறொரு கப்பலுடன் மோதி மூழ்கியதில் 549 பேர் உயிரிழந்தனர்.
1903 – பிலிப்பைன்-அமெரிக்கப் போர் அதிகாரபூர்வமாக நிறைவடைந்தது.
1911 – ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கே பெரும் வெப்ப அலை தாக்கியதில் 380 பேர் வரை உயிரிழந்தனர்.
1914 – சாரயேவோவில் ஆறு நாட்களுக்கு படுகொலை செய்யப்பட்ட இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட், அவரது மனைவி சோஃபி ஆகியோரின் இறுதி நிகழ்வுகள் வியன்னாவில் இடம்பெற்றன.
1918 – உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசு மற்றும் அவரது குடும்பத்தினர் போல்செவிக்குகளினால் கொல்லப்பட்டனர் (யூலியன் நாட்காட்டி).
1934 – அணுகுண்டுகளில் பின்னர் பயன்படுத்தப்பட்ட செயல் விளைவுத் தொடரின் வடிவமைப்புக்கு லியோ சிலார்டு என்பவர் காப்புரிமம் பெற்றார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: ரீகா நகரில் யூத தொழுகைக் கூடம் ஒன்று நாட்சிகளால் 300 யூதர்களுடன் எரியூட்டப்பட்டது.
1941 – நாட்சிகள் உக்ரைனில் லிவீவ் என்னும் இடத்தில் தாம் கைது செய்த போலந்து அறிவியலாளர்கள், எழுத்தாளர்கள் 45 பேரைக் கொன்றனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: கிரிமியாவில் 250-நாள் செவஸ்தபோல் முற்றுகை அச்சுப் படைகள் அந்நகரைக் கைப்பற்றியதை அடுத்து முடிவுக்கு வந்தது.
1946 – 381 ஆண்டு கால குடியேற்றவாதிகளின் ஆட்சியின் பின்னர் பிலிப்பீன்சு ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1947 – பிரித்தானிய இந்தியாவை இந்தியா, பாக்கித்தான் என இரண்டு நாடுகளாகப் பிரிக்கும் சட்டமூலம் ஐக்கிய இராச்சியத்தின் மக்களவையில் முன்வைக்கப்பட்டது.
1951 – வில்லியம் ஷாக்லி திரான்சிஸ்டரைத் தாம் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தார்.
1961 – சோவியத் அணுவாற்றல் நீர்மூழ்கி கே-19 தன வெள்ளோட்டத்தில் பழுதடைந்ததில் அதில் பயணம் செய்த 22 பேர் கடிய கதிர்வீச்சு நோய்க்கூட்டறிகுறி காரணமாக அடுத்த இரு ஆண்டுகளில் இறந்தனர்.
1976 – என்டபே நடவடிக்கை: உகாண்டாவில் பாலத்தீனப் போராளிகளால் கடத்தப்பட்ட ஏர் பிரான்சு விமானத்தில் இருந்த நால்வரைத் தவிர ஏனையோரை இசுரேலிய பாதுகாப்புப் படைகள் விடுவித்தனர்.
1982 – ஈரானிய தூதர்கள் மூவர், ஒரு ஊடகவியலாளர் லெபனானில் கடத்தப்பட்டனர். இவர்கள் என்ன ஆனார்கள் என்பது இதுவரை அறியப்படவில்லை.
1988 – வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் முதல் தமிழ் மாநாடு பென்சில்வேனியாவில் நடைபெற்றது.
1994 – ருவாண்டா இனப்படுகொலை: ருவாண்டா தலைநகர் கிகாலி ருவாண்டா தேசப்பற்று முன்னணியினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து அந்நகரில் இனப்படுகொலை முடிவுக்கு வந்தது.
1997 – நாசாவின் பாத்ஃபைண்டர் விண்கலம் செவ்வாய்க் கோளில் இறங்கியது.
1998 – ஜப்பான் நொசோமி விண்கலத்தை செவ்வாய்க் கோளை நோக்கி ஏவியது.
2001 – விளாதிவசுத்தோக் வான்னூர்தி ஒன்று இர்கூத்சுக்கை அணுகும் போது வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 145 பேரும் உயிரிழந்தனர்.[1]
2012 – இக்சு போசானை ஒத்த துணிக்கைகள் பெரிய ஆட்ரான் மோதுவியில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்தது.
பிறப்புகள்
1790 – ஜார்ஜ் எவரஸ்ட், உவெல்சு புவியியலாளர் (இ. 1866)
1804 – நாதனீல் ஹாதோர்ன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1864)
1807 – கரிபால்டி, இத்தாலிய அரசியல்வாதி (இ. 1882)
1844 – எட்மோனியா லூவிசு, அமெரிக்க-இத்தாலிய சிற்பி (இ. 1907)
1868 – என்றியேட்டா லீவிட், அமெரிக்க வானியலாளர் (இ. 1933)
1871 – ஊபர்ட் பூத், ஆங்கிலேயப் பொறியியலாளர் (இ. 1955)
1872 – கால்வின் கூலிஜ், அமெரிக்காவின் 30வது அரசுத்தலைவர் (இ. 1933)
1884 – சு. இராசரத்தினம், இலங்கை அரசியல்வாதி, சைவ சமயப் பெரியார் (இ. 1970)
1898 – குல்சாரிலால் நந்தா, இந்திய அரசியல்வாதி (இ. 1998)
1910 – குளோரியா ஸ்டுவர்ட், அமெரிக்க நடிகை, பாடகி (இ. 2010)
1933 – கொனியேட்டி ரோசையா, ஆந்திரா அரசியல்வாதி
1954 – தேவேந்திர குமார் ஜோஷி, இந்தியக் கடற்படைத் தலைவர்
1956 – லட்சுமிகாந்த் பர்சேகர், இந்திய அரசியல்வாதி
1959 – விக்தோரியா அபுரீல், எசுப்பானிய நடிகை
1961 – மரகதமணி, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர்
இறப்புகள்
965 – ஐந்தாம் பெனடிக்ட் (திருத்தந்தை)
1826 – ஜான் ஆடம்ஸ், அமெரிக்காவின் 2வது அரசுத்தலைவர் (பி. 1735)
1826 – தாமசு ஜெஃபர்சன், அமெரிக்காவின் 3வது அரசுத்தலைவர் (பி. 1743)
1831 – ஜேம்ஸ் மன்ரோ, அமெரிக்காவின் 5வது அரசுத்தலைவர் (பி. 1758)
1850 – வில்லியம் கிர்பி, ஆங்கிலேயப் பூச்சியியலாளர் (பி. 1759)
1896 – மார்செலோ எச். டெல் பிலார், பிலிப்பீனிய எழுத்தாளர் (பி. 1850)
1902 – விவேகானந்தர், இந்திய சமயத் தலைவர் (பி. 1863)
1910 – ஜியோவன்னி ஸ்கையாபரெலி, இத்தாலிய வானியலாளர், வரலாற்றாளர் (பி. 1835)
1925 – பியர் ஜார்ஜியோ ஃபிராசாதி, இத்தாலிய கத்தோலிக்க அருளாளர் (பி. 1901)
1934 – மேரி கியூரி, நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு-போலந்து வேதியியலாளர் (பி. 1867)
1963 – பிங்கலி வெங்கையா, இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் (பி. 1876)
1975 – எஸ். பி. சீனிவாசகம், மலேசிய அரசியல்வாதி (பி. 1917)
1992 – கோவை மகேசன், ஈழத்து எழுத்தாளர், பத்திரிகையாளர் (பி. 1938)
2016 – அப்பாஸ் கியரோஸ்தமி, ஈரானிய திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், ஒளிப்பதிவாளர் (பி. 1940)
சிறப்பு நாள்
விடுதலை நாள் (ஐக்கிய அமெரிக்கா, பெரிய பிரித்தானியாவிடம் இருந்து 1776)
விடுதலை நாள் (வடக்கு மரியானா தீவுகள்)
விடுதலை நாள் (ருவாண்டா)
குடியரசு நாள் (பிலிப்பீன்சு)
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews