Income Tax: ரூ. 10,000-க்கு மேல் வரி பாக்கி வைத்திருந்தால் அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்படும்..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 08, 2019

Income Tax: ரூ. 10,000-க்கு மேல் வரி பாக்கி வைத்திருந்தால் அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்படும்..!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஜூலை 05, 2019, வெள்ளிக்கிழமை அன்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில் பல்வேறு நுணுக்கமான விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளியே வந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று தான் இந்த 10,000 ரூபாய்க்கு மேல் வரி பாக்கி என்றால் வழக்கு என்கிற விஷயம் இனி தனி ஒருவர் (Individual), ஆண்டுக்கு 10,000 ரூபாய்க்கு மேல் வருமான வரி (Income Tax) செலுத்த வேண்டிய பாக்கி இருக்கிறது, வருமான வரி தாக்கல் செய்யவில்லை போன்ற பிரச்னைகள் இருக்கிறது என்றால்.. அவர் மீது வருமான வரித் துறை, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து வரியை வசூலிக்கலாம். இதுவே ஆண்டுக்கு செலுத்த வேண்டிய வருமான வரி (Income Tax) 10,000 ரூபாய்க்கு கீழ் இருக்கிறது என்றால், அவர் மீது வருமான வரித் துறை எந்த ஒரு வழக்கும் போடாது என பட்ஜெட்டில் சொல்லப்பட்டிருக்கிறதாம். இந்த 2019 - 20 நிதி ஆண்டு பட்ஜெட்டுக்கு முன் ஆண்டுக்கு 3,000 ரூபாய்க்கு மேல் வருமான வரி பாக்கி செலுத்தாது இருந்தால் அவர்கள் மீது வழக்கு போட்டு வசூலிக்க இந்திய வருமான வரிச் சட்டம் 276CC வழி வகை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதைக் குறித்து வரி அனலிஸ்டுகள் கூறும் போது "10,000 ரூபாய்க்கு மேல் வருமான வரி (Income Tax) பாக்கி வைத்திருப்பவர்கள் மீது எல்லாம் வழக்கு தொடுப்பேன் என்பது அத்தனை சரியாகப் படவில்லை. வழக்கு தொடுத்து ஒருவரிடம் வரி வசூலிப்பது என்பது ஒரு மிகப் பெரிய வேலை. இத்தனை கடுமையான நடவடிக்கைகளை வெறும் 10,000 ரூபாய் வரிக்கு சிரமப்பட்டு எடுப்பதற்கு பதிலாக ஒரு 5 லட்சம் ரூபாயை வரம்பாக வைத்திருக்களாம்" என்கிறார்கள். அதோடு "நிதி அமைச்சகம் இனி Tax Deducted at source எனப்படும் வருவாய் வரும் இடத்திலேயே வரி பிடித்தம் செய்வது மற்றும் Adance Tax எனப்படும் முன் கூட்டியே செலுத்திய வரிகள் போன்றவைகளை மட்டுமே வரிக் கணக்கில் வரவு வைத்தார்கள். இனி நாமே முன் கூட்டி கணக்கிட்டுச் செலுத்தும் Self Assessment Tax-களையும் வரிக் கணக்கில் வரவு வைப்போம்" எனச் சொல்லி இருக்கிறார்கள். இந்த நடவடிக்கையை வரி அனலிஸ்டுகள் வரவேற்று இருக்கிறார்கள்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews