ஈரோட்டில் ராணுவத்தில் சேர விரும்புவோர்க்கான ஆள் சேர்ப்பு முகாம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 04, 2019

ஈரோட்டில் ராணுவத்தில் சேர விரும்புவோர்க்கான ஆள் சேர்ப்பு முகாம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை ராணுவ ஆள் சேர்க்கும் தலைமை செயலகம், கோயம்புத்தூர் ராணுவ ஆள்சேர்க்கும் அலுவகத்தின் மூலமாக ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆள் சேர்ப்பு முகாம் ஈரோட்டில் உள்ள வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் ஆகஸ்ட்.22-2019 முதல் செப்டம்பர்.02-2019 வரை நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாட்டிலுள்ள கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, மதுரை, தேனி, சேலம் போன்ற 11 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்துகொள்ளலாம்.

பணிகள்:
சோல்ஜர் டெக்னிக்கல் (Soldier Technical)
சோல்ஜர் டெக்னிக்கல் அம்யூனிசன்/ஏவியேசன் (Soldier Technical - Amn/Avn)
சோல்ஜர் நர்சிங் அசிஸ்டெண்ட் (Soldier Nursing Assistant)
சோல்ஜர் ஜெனரல் டியூட்டி (Soldier General Duty)
சோல்ஜர் கிளர்க் / ஸ்டோர் கீப்பர் (Soldier Clerk/Store Keeper Technical)
சோல்ஜர் டிரேட்ஸ்மேன்(Soldier TradesMan) போன்ற பல்வேறு பிரிவுகள்
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 08.07.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.08.2019
முகாம் நடைபெறும் தேதிகள்: 22.08.2019 முதல் 02.09.2019 வரை
அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்: 09.08.2019 லிருந்து 22.08.2019
மருத்துவ பரிசோதனை நடைபெறும் நாள்: 23.08.2019

வயது வரம்பு: (01.10.2019 அன்றுக்குள்)
1. சோல்ஜர் ஜெனரல் டியூட்டி பணிக்கு மட்டும், குறைந்தபட்சமாக 17 வயது 6 மாதம் முதல் 21 வயது வரை இருத்தல் வேண்டும். 2. சோல்ஜர் ஜெனரல் டியூட்டி தவிர மற்ற பணிகளுக்கு, குறைந்தபட்சமாக 17 வயது 6 மாதம் முதல் 23 வயது வரை இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், குறைந்தபட்சமாக 8 / 10 / 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் அதிகபட்சமாக பட்டப்படிப்பு வரை தேர்ச்சி அவசியம்.
குறிப்பு: கல்வி சான்றிதழ் மற்றும் குறிப்பிட்டுள்ள பல்வேறு சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில், http://www.joinindianarmy.nic.in/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.
குறிப்பு: ஒரு விண்ணப்பதாரர் ஒரு பிரிவுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
தேர்வு நடைமுறை: 1. உடற்தகுதி தேர்வு
2. உடல் அள்வீடுகளுக்கான தேர்வு
3. மருத்துவ தேர்வு
4. பொது நுழைவு தேர்வு மேலும், இது குறித்த பல்வேறு தகவல்களுக்கு, http://www.joinindianarmy.nic.in/writereaddata/Portal/BRAVO_NotificationPDF/_22_AUG_TO_02_SEP_19.pdf
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews