யோகா-இயற்கை மருத்துவப் படிப்புகள்: 1,688 விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 23, 2019

யோகா-இயற்கை மருத்துவப் படிப்புகள்: 1,688 விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு நிகழாண்டில் 1,688 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கள் விரைவில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்றும், அதைத் தொடர்ந்து கலந்தாய்வு நடைபெறும் என்றும் இந்திய மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசு, தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் பி.என்.ஒய்.எஸ். எனப்படும் இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு 600-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. குறிப்பாக, அரசுக் கல்லூரியில் 60 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு 385 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 192 இடங்களும் உள்ளன. இந்நிலையில், அந்தப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நிகழாண்டு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்ப விநியோகம், கடந்த 1-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற்றது. www.tnhealth.org , www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களின் வாயிலாகவும், யோகா - இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் நேரடியாகவும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பங்களைப் பெற்றிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவற்றில் பெரும்பாலானோர் ஆன்-லைன் மூலமாகவே விண்ணப்பங்களைத் தரவிறக்கம் செய்துள்ளனர். இந்நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான அவகாசம் திங்கள்கிழமையுடன் (ஜூலை 22) நிறைவடைந்தது. இந்திய மருத்துவத் துறை அதிகாரிகளின் தகவல்படி, மொத்தம் 1,688 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளைக் காட்டிலும் இந்த முறை வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகமாகும். யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான வரவேற்பு மாணவர்கள் இடையே சமீபகாலமாக அதிகரித்து வருவதையே இது உணர்த்துவதாகத் தெரிவித்துள்ள இந்திய மருத்துவத் துறை அதிகாரிகள், அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்றனர். கலந்தாய்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews