👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிரதமரின் விவசாய உதவித்தொகை கிடைக்காத, ஆறு லட்சம் விவசாயிகளின் விண்ணப்பங்களில் உள்ள பிழைகளை, திருத்தும் பணியை வேளாண்துறை துவக்க உள்ளது.
நாடு முழுவதும் உள்ள, சிறு, குறு விவசாயிகளுக்கு, ஆண்டு தோறும், 6,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம், பிப்ரவரியில், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. முயற்சிஇத்திட்டம், இம்மாதம், 24ம் தேதி, செயலாக்கத்திற்கு வந்தது.தமிழகத்தில், 70 லட்சம் சிறு, குறு விவசாயிகள் உள்ளனர். அவர்களுக்கு, திட்ட நிதியை பெற்று தருவதற்கான முயற்சியை, வேளாண் துறையினர் துவக்கினர்.
ஆனால், பயனாளிகளை தேர்வு செய்வதில், பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டன. வருமான வரி செலுத்தாதோர், அரசு ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகளாக இருப்போர் மற்றும் இருந்தோர் சலுகைகளை பெற முடியாது என, அறிவிக்கப்பட்டது.இதனால், மாநிலத்தில், 28 லட்சம் விவசாயிகள் மட்டுமே, இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில், 22 லட்சம் பேருக்கு, முதல் தவணையாக, 2,000 ரூபாயும், இரண்டாவது தவணையாக, 2,000 ரூபாயும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.மீதமுள்ள, ஆறு லட்சம் விவசாயிகளுக்கு, பிரதமரின் உதவித்தொகை கிடைக்கவில்லை.
நடவடிக்கை
இவர்களின் வங்கி கணக்கு, ஆதார், நில விபரங்கள் போன்றவை, ஆன்லைன் விண்ணப்பத்தில் பதிவு செய்யும் போது, பிழையாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே, இவர்களுக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை. தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருந்ததால், இந்த விஷயத்தில் வேளாண் துறையால், எதையும் செய்ய முடியவில்லை. தற்போது, விவசாயிகளுக்கு, பிரதமரின் உதவித்தொகை பெற்றுத் தரும் முயற்சிகள் துவங்கிஉள்ளன.
வேளாண் துறை அமைச்சர், துரைக்கண்ணு உத்தரவின்படி, செயலர் ககன்தீப்சிங் பேடி, இயக்குனர் தட்சிணாமூர்த்தி, இந்த நடவடிக்கையை எடுத்துஉள்ளனர்.இதற்காக, ஆறு லட்சம் விவசாயிகளின் விண்ணப்பங்களில் உள்ள பிழைகளை கண்டறிந்து, அவற்றை திருத்தும் நடவடிக்கைகள் விரைவில் துவங்க உள்ளன. எனவே, விடுபட்ட விவசாயிகளுக்கு, இம்மாத இறுதிக்குள், உதவித்தொகை கிடைக்கும் வாய்ப்பு உருவாகிஉள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U