இன்றும், நாளையும், 'உங்களால் முடியும்': இன்ஜி., கவுன்சிலிங் குறித்து ஆலோசனை பெறலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 29, 2019

இன்றும், நாளையும், 'உங்களால் முடியும்': இன்ஜி., கவுன்சிலிங் குறித்து ஆலோசனை பெறலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கு வழிகாட்டும், 'தினமலர் - உங்களால் முடியும்' நிகழ்ச்சி, இன்றும், நாளையும், சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் நடக்கிறது.பிளஸ் 2 முடித்து,இன்ஜினியரிங் படிக்க விண்ணப்பித்தவர்களுக்கு, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் சார்பில், ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இந்த கவுன்சிலிங்கின் நுணுக்கங்களை விளக்கும் வகையில், 'தினமலர்'நாளிதழ் சார்பில், உங்களால் முடியும் என்ற, நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இன்றும், நாளையும், சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில், இந்த நிகழ்ச்சி நடக்கிறது. சென்னையில் அண்ணா நகர், மூன்றாவது அவென்யூவில் உள்ள, டி.கே.கல்யாண மாளிகையில், காலை, 10:00 முதல், 1:00 மணி வரை நிகழ்ச்சி நடக்கிறது.இதில், காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு கல்லுாரி பேராசிரியர், பாஸ்கரன் பங்கேற்று, ஆன்லைன் கவுன்சிலிங் விதிகளை விளக்க உள்ளார்.நாளை, குரோம்பேட்டை நியூ காலனி, சி.எல்.சி., ஒர்க்ஸ் சாலையில் உள்ள, லட்சுமி ஆண்டாள் கல்யாண மண்டபத்தில், காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை நிகழ்ச்சி நடக்கிறது.மாலை, 4:00 முதல், 7:00 மணி வரை, காஞ்சிபுரம், வடக்கு மாட வீதியில் உள்ள, ராதா பார்ட்டி ஹாலில் நிகழ்ச்சி நடக்கிறது.இதில், பர்கூர் அரசு இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர், ஆழ்வார்சாமி பங்கேற்று, கவுன்சிலிங் விதிமுறைகளை விளக்க உள்ளார்.இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும், மாணவர்கள், எந்த கல்லுாரியில், என்ன பாடப்பிரிவில் படிக்கலாம் என்பன போன்ற சந்தேகங்களுக்கு, கல்வி ஆலோசகர், ஜெயபிரகாஷ் காந்திஆலோசனை வழங்குகிறார்.நிகழ்ச்சியில் பங்கேற்கும், ௧,௦௦௦ மாணவர்களுக்கு, இலவச, 'ரோபடிக்ஸ் ஒர்க் ஷாப்'பில் பங்கேற்க, வாய்ப்பு வழங்கப்படும்.மேலும், 50 மாணவர்களுக்கு, இன்ஜினியரிங் பாடப்பிரிவுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.நிகழ்ச்சியில் பங்கேற்கும், அனைத்து மாணவர்களுக்கும், கவுன்சிலிங் கையேடு இலவசமாக வழங்கப்படும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews