போலி ஆராய்ச்சி கட்டுரை ஒழிப்பு : யு.ஜி.சி., நடவடிக்கை துவக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 02, 2019

போலி ஆராய்ச்சி கட்டுரை ஒழிப்பு : யு.ஜி.சி., நடவடிக்கை துவக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here
போலி ஆராய்ச்சி கட்டுரைகளை கண்டுபிடிக்க, யு.ஜி.சி., முடிவு செய்துள்ளது. இதற்காக ஆய்வு கமிட்டி அமைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.நாடு முழுவதும், உயர்கல்வியில் உள்ள குளறுபடிகள், மோசடிகள், முறைகேடுகளை களைய, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதிய திட்டம்இதற்காக, மத்திய மனிதவள மேம்பாட்டு துறையும், பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி.,யும், புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன.பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்வோரில் பலர், உண்மையில் தாங்களாகவே ஆராய்ச்சி செய்து, அதன் முடிவுகளை தாக்கல் செய்வதில்லை. மாறாக, யாராவது சிலர் மேற்கொண்ட ஆராய்ச்சி படிப்பு மற்றும் கட்டுரைகளை காப்பியடித்து, அதை, பிஎச்.டி., பட்டம் பெற தாக்கல் செய்வதாக, புகார்கள் அதிகரித்து உள்ளன.
இதுபோல, போலி ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிப்பதை கட்டுப்படுத்த, ஆராய்ச்சி கட்டுரைகளை ஆன்லைனில் சரிபார்க்கும் வசதியை, மத்திய அரசு ஏற்படுத்தியது. கமிட்டிஇதன் ஆய்வில், பல கட்டுரைகளை, யாரோ சிலர் எழுத, யாரோ சிலர் தங்கள் பெயரை போட்டு, பட்டம் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.எனவே, வரும் காலங்களில், போலி ஆராய்ச்சி கட்டுரைகளை ஒழிக்க, யு.ஜி.சி., முடிவு செய்துள்ளது. இதன் முதல் கட்டமாக, போலி ஆராய்ச்சி கட்டுரைகளை கண்டிபிடித்து, அவற்றை நீக்குவதற்கு கமிட்டி அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews