எம்.பி.பி.எஸ்., படிப்பில் அரசுக்கு 170 சீட்! 85 பி.டி.எஸ்., இடங்களும் ஒதுக்கீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 28, 2019

எம்.பி.பி.எஸ்., படிப்பில் அரசுக்கு 170 சீட்! 85 பி.டி.எஸ்., இடங்களும் ஒதுக்கீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதுச்சேரி மாநிலத்தில் பிம்ஸ், மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா என மூன்று தனியார் மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் தலா 150 எம்.பி.பி.எஸ்., இடங்கள் என, மொத்தம் 450 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஒவ்வொரு ஆண்டும் பெறப்பட்டு, &'சென்டாக்&' மூலம் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்தாண்டு &'நீட்&' தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமான மாணவர்கள், மருத்துவ கனவுகளோடு விண்ணப்பித்துள்ளனர்.இந்த சூழ்நிலையில், மூன்று தனியார் மருத்துவக் கல்லுாரிகளிலும் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக 170 எம்.பி.பி.எஸ்., இடங்கள் பெறப்பட்டுள்ளன. பிம்ஸ் -55, மணக்குள விநாயகர்-55, வெங்கடேஸ்வரா-60 இடங்கள் அரசுக்கு ஒதுக்கீடாக அளித்துள்ளன. இந்த இடங்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
அதன் விபரம் வருமாறு: பிம்ஸ்பொதுப்பிரிவு-27; ஓ.பி.சி.,-6; எம்.பி.சி.,-10; எஸ்.சி.,-9 ; முஸ்லிம்-1 ; மீனவர்-1 ; பழங்குடி-1 என்ற அடிப்படையில் நிரப்பப்படும். விடுதலைப் போராட்ட வீரர் வாரிசு-2; மாற்றுத்திறனாளி-3; முன்னாள் ராணுவ வீரர் வாரிசு-1; விளையாட்டு வீரர்-1 இடங்கள் உள் ஒதுக்கீடாக அமையும்.மணக்குள விநாயகர்பொதுப்பிரிவு-28; ஓ.பி.சி.,-6 ; எம்.பி.சி.,-10; எஸ்.சி.,-9; முஸ்லிம்-1; மீனவர்-1 என்ற அடிப்படையில் நிரப்பப்படும். உள் ஒதுக்கீடாக விடுதலைப் போராட்ட வீரர் வாரிசு-2; மாற்றுத்திறனாளி-3; முன்னாள் ராணுவ வீரர் வாரிசு-1, விளையாட்டு வீரர்-1 இடம் கிடைக்கும்.வெங்கடேஸ்வராபொதுப்பிரிவு-30 ; ஓ.பி.சி.,-7 ; எம்.பி.சி.,-11 ; எஸ்.சி,.-9 ; எஸ்.டி,.,-1 ; முஸ்லிம்-1 ; மீனவர்-1 என்ற இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படும். உள் ஒதுக்கீடாக, விடுதலைப்போராட்ட வீரர் வாரிசு-2, மாற்றுத் திறனாளி-3; முன்னாள் ராணுவ வீரர் வாரிசு-1 ; விளையாட்டு வீரர்-1 இடம் கிடைக்கும்.ஒட்டுமொத்தமாக இந்த மூன்று தனியார் மருத்துவ கல்லுாரிகளில் பெறப்பட்ட 170 எம்.பி.பி.எஸ்., இடங்கள், பொதுப்பிரிவு-85, ஓ.பி.சி.,-19, எம்.பி.சி.,-31, எஸ்.சி.,-27, எஸ்.டி.,-1, முஸ்லிம்-3, மீனவர்-3, பழங்குடியினர்-1 என்ற அடிப்படையில் நிரப்பப்படும். உள் ஒதுக்கீடாக விடுதலைப்போராட்ட வீரர் வாரிசு -6, மாற்றுத்திறனாளி-9, முன்னாள் ராணுவ வீரர் வாரிசு-3, விளையாட்டு வீரர்-3இடங்கள் கிடைக்கும்.பல் மருத்துவம்பல் மருத்துவம் எனப்படும் பி.டி.எஸ்., படிப்பினை பொறுத்தவரை, புதுச்சேரி மாநிலத்தில் மாகி பல் மருத்துவக் கல்லுாரி, வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லுாரி என இரண்டு கல்லுாரிகள் உள்ளன.
இவற்றில் தலா 100 இடங்கள் என 200 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன.இந்தாண்டு, மாகி பல் மருத்துவக் கல்லுாரி-35; வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லுாரி -50 இடங்கள் என 85 பி.டி.எஸ். இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக பெறப்பட்டுள்ளன. இந்த இடங்கள் கீழ்க்கண்ட இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படும்.மாகி பல் மருத்துவ கல்லுாரிபொதுப்பிரிவு-17, ஓ.பி.சி.,-4; எம்.பி.சி.,-6 ; எஸ்.சி.,-6 ; முஸ்லிம்-1 ; மீனவர்-1 என்ற அடிப்படையில் நிரப்பப்படும். உள் ஒதுக்கீடாக விடுதலைப் போராட்ட வீரர் வாரிசு-1; மாற்றுத்திறனாளி-2 ; முன்னாள் ராணுவ வீரர் வாரிசு-1, சீட் கிடைக்கும்.வெங்கடேஸ்வராபொதுப்பிரிவு-25, ஓ.பி.சி.,-6, எம்.பி.சி.,-9, எஸ்.சி,-8, எஸ்.டி.,-1, மீனவர்-1 என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. உள் ஒதுக்கீடாக விடுதலைப் போராட்ட வீரர் வாரிசு-2, மாற்றுத்திறனாளி-3, முன்னாள் ராணுவ வீரர் வாரிசு-2, விளையாட்டு வீரர்-1 இடங்கள் கிடைக்கும்.ஒட்டுமொத்தமாக இரண்டு கல்லுாரிகளிலும் பெறப்பட்ட 85 பி.டி.எஸ், இடங்கள் பொதுப்பிரிவு-42, ஓ.பி.சி.,-10, எம்.பி.சி., -15, எஸ்.சி.,-14, எஸ்.டி.,-1, முஸ்லிம்-1, மீனவர்-2 இடங்களும், உள் ஒதுக்கீடாக விடுதலைப் போராட்ட வீரர் வாரிசு 3, மாற்றுத்திறனாளி-5, முன்னாள் ராணுவ வீரர் வாரிசு-3, விளையாட்டு வீரர்-1 சீட் கிடைக்கும்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews