IPL: புள்ளிகள் பட்டியல் சொல்லும் சுவாரசியமான கதைகள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 06, 2019

IPL: புள்ளிகள் பட்டியல் சொல்லும் சுவாரசியமான கதைகள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459

csk_team_2019
நேற்றுடன் இந்த வருட ஐபிஎல் போட்டியின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவு பெற்றன. புள்ளிகள் பட்டியல் மூலம் அறிய வரும் புள்ளிவிவரங்களும் புதிய தகவல்களும்:
* வேறெந்த வருடத்தை விடவும் இந்த வருடம் ஒவ்வொரு அணியும் கடும் போட்டி மனப்பான்மையுடன் விளையாடியுள்ளன. இதனால் நான்காம் இடம் பெற்று பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் கடைசி இடம் பெற்ற பெங்களூர் அணிக்கும் இடையே உள்ள புள்ளி வித்தியாசம் 1 மட்டுமே. 
* ஐபிஎல் வரலாற்றில் 12 புள்ளிகளுடன், ஏழு வெற்றிகள் அடையாமல் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்ற முதல் அணி என்கிற பெருமையைப் பெற்றுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். 
* பங்கேற்ற எல்லா அணிகளும் குறைந்தபட்சம் 11 புள்ளிகள் பெற்றது இந்த வருடம்தான். 
* 8 அணிகள் பங்கேற்ற ஐபிஎல் போட்டியில் 9 வெற்றிகள் பெற்றும் டாப் 2-ல் இடம்பிடிக்காத முதல் அணி தில்லி. 
* ஐபிஎல் போட்டியில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த அணிகள்
2008: ராஜஸ்தான் 2009: தில்லி 2010: மும்பை 2011: பெங்களூர் 2012: தில்லி 2013: சென்னை 2014: பஞ்சாப் 2015: சென்னை 2016: குஜராத் 2017: மும்பை 2018: ஹைதராபாத் 2019: மும்பை.
* ஐபிஎல் போட்டியில் புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்த அணிகளே அதிகமுறை கோப்பையை வென்றுள்ளன. ஆறுமுறை இதுபோல நிகழ்ந்துள்ளது. 2011 முதல் 2015 வரை தொடர்ச்சியாக ஐந்து வருடங்களும் இரண்டாம் பிடித்த அணிகளான சென்னை, கொல்கத்தா, மும்பை, கொல்கத்தா, மும்பை ஆகிய அணிகளே ஐபிஎல் கோப்பையை வென்றன. கடந்த வருடமும் புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடம் வென்ற சென்னையே கோப்பையை வென்றது.
* சிஎஸ்கே அணி கலந்துகொள்ளும் பத்தாவது ஐபிஎல் போட்டி இது (இடைக்காலத் தடை காரணமாக இரு வருடம் பங்கேற்கவில்லை). இந்த வருடமும் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றதால் பங்கேற்ற ஒவ்வொரு முறையும் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்ற ஒரே அணி என்கிற பெருமையை இந்த வருடமும் தக்கவைத்துள்ளது. அடுத்த இடத்தில் மும்பை அணி. 12 ஐபிஎல்களில் 8 முறை பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளது.
* அதிகமுறை ஐபிஎல் போட்டியை வென்ற அணிகள் - சென்னை & மும்பை, தலா 3 முறை. கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய அணிகள் தலா இருமுறை வென்றுள்ளன. இதில் மூன்று அணிகள் மீண்டும் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளன. 
* ஐந்து முறை பிளே ஆஃப்புக்குத் தகுதி பெற்றும் பிரபல வீரர்களைக் கொண்டிருந்தும் பெங்களூர் அணியால் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லமுடியவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக பிளேஆஃப்புக்குத் தகுதி பெறாத நிலையில் இந்த வருடமும் பெங்களூர் அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெறவில்லை. 
* இந்த வருடமும் பிளேஆஃப்புக்குத் தகுதி பெறாத பஞ்சாப், கடந்த 11 ஐபிஎல்களில் இருமுறைதான் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளது. ஆனால் கடைசி இரு இடங்களை 4 முறை பிடித்துள்ளது.
* கடைசி இரு இடங்களை அதிகமுறை பிடித்த அணிகளில் தில்லிக்குத்தான் முதலிடம். ஆரம்பத்தில் வலுவான அணியாக இருந்த தில்லி, பிறகு தேய்ந்து கட்டெறும்பாகிவிட்டது. 5 முறை கடைசி இரு இடங்களைப் பிடித்து தில்லி ரசிகர்களை மிகவும் சோதித்துள்ளது. இந்தமுறை பிளேஆஃப்புக்குத் தகுதியடைந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 2012-க்குப் பிறகு இப்போதுதான் தில்லி அணி பிளேஆஃப்புக்குத் தகுதியடைந்துள்ளது. இந்த வருடம் விளையாடுகிற  8 அணிகளில் தில்லி அணிதான் ஒருமுறைகூட ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றதில்லை.
* பெங்களூர், தில்லி, பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளும் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றது கிடையாது. இந்த வருடம் பெங்களூர், பஞ்சாப் அணிகள் பிளேஆஃப்புக்குத் தகுதி பெறாததால் அந்த அணிகளின் சோகம் இன்னமும் தொடர்கிறது. 
* கடந்த வருடம் வரை கடைசி இடத்தை 4 முறை பிடித்த அணியாக இருந்தது பஞ்சாப். இந்த வருடம் கடைசி இடத்தைப் பிடித்ததன் மூலம் பெங்களூரும் பஞ்சாப்புடன் இணைந்துவிட்டது. 
 அணி சாம்பியன்  பிளேஆஃப்- க்குத்   தகுதி  கடைசி 2   இடங்களில் 
 சென்னை  3 10 0
 மும்பை 3 8 1
 கொல்கத்தா  2 6 1
 ஹைதராபாத்  2 7 2
 ராஜஸ்தான் 1 4 2
 பெங்களூர் 0 5 4
 பஞ்சாப் 0 2  4
 தில்லி 0 4 5
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews