👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
சென்னை விஐடியில் வியாழக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் மாணவி நந்தினி ஸ்ரீகாந்துக்கு மாணவர் சேர்க்கைக்கான முதல் அனுமதிக் கடிதத்தை வழங்குகிறார் விஐடி துணைத் தலைவர் ஜி. வி. செல்வம்.
சென்னை வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூர் விஐடியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கியது.
விஐடி தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் நுழைவுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினி ஸ்ரீகாந்துக்கு உயிரி தொழில்நுட்பப் படிப்புக்கான அனுமதிக் கடிதத்தை வழங்கினார்.
விஐடி பொறியியல் நுழைவுத் தேர்வு அகில இந்திய அளவில் ஏப்ரல் 10 முதல் 21-ம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதிலிருந்து சுமார் ஒரு லட்சத்து 62 ஆயிரம் மாணவ, மாணவிகள் நுழைவுத் தேர்வில் பங்கேற்றனர்.
மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்டக் கலந்தாய்வு சென்னை, வேலூர், போபால் மற்றும் அமராவதி ஆகிய இடங்களில் உள்ள விஐடி வளாகங்களில் வியாழக்கிழமை தொடங்கியது. மதிப்பெண் தர வரிசைப்படி முதல் 10,000 மாணவ, மாணவிகள் முதல் கட்ட கலந்தாய்வில் கலந்து கொண்டனர்.
மாணவர் சேர்க்கைக்கான முதல் அனுமதிக் கடிதம் பெற்ற மாணவி நந்தினி ஸ்ரீகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், மரபணுக்கள் ஆய்வு மூலம் மனித உடலில் ஏற்படும் நோய்களைக் அறிந்து குணமாக்குவதற்கான வழிமுறைகளைக் கண்டறியும் ஆர்வம் காரணமாக உயிரி தொழில்நுட்பப் பாடப்பிரிவைத் தேர்வு செய்துள்ளேன் என்றார்.
கலந்தாய்வில் விஐடி இணை துணைவேந்தர் என். சம்பந்தம், முதன்மை முதல்வர் வி. எஸ். காஞ்சனா பாஸ்கரன், மாணவர் சேர்க்கை உதவி இயக்குநர் டி. பழனிராஜன், கூடுதல் பதிவாளர் பி.கே. மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U